Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் 26-03-2023

March 26, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
இன்றைய ராசி பலன்கள் 21-03-2023
0
SHARES
Share on FacebookShare on Twitter

26.03.2023 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம் பங்குனி மாதம் – 12ம் நாள்
நல்ல நேரம் காலை:8.30 – 9.00; மாலை:3.30 – 4.30
எமகண்டம் மதியம் 12.00 – 1.30
இராகு காலம் மாலை 4.30 – 6.00
குளிகை: மாலை: 03.00 – 04.30

பொது: வளர்பிறை. பஞ்சமி திதி மாலை 4.33 மணி வரை; பிறகு சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 2.01 மணி வரை; பிறகு ரோகிணி. யோகம்: சித்த யோகம்.

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாற்றினால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள் வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே போராடி வெல்லும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில்  மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில்  பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். உங்களின் திறமைகளை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் எல்லாம் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உங்கள் உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

இந்தியா முழுவதும் போராட்டம்-காங்கிரஸ்!

Next Post

மன்னார் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! தீவிரமடையும் விசாரணை

Next Post
மன்னார் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! தீவிரமடையும் விசாரணை

மன்னார் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! தீவிரமடையும் விசாரணை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.