Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் 22-03-2023

March 22, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
இன்றைய ராசி பலன்கள் 21-03-2023
0
SHARES
Share on FacebookShare on Twitter

22.03.2023 புதன்கிழமை சுபகிருது வருடம் பங்குனி மாதம் – 8ம் நாள்
நல்ல நேரம் காலை: 9.30 – 10.30; மாலை: 4.30 – 5.30
எமகண்டம் காலை 7.30 – 9.00
இராகு காலம் மதியம் 12.00 – 1.30
குளிகை: காலை: 10.30 – 12.00

பொது: வளர்பிறை. பிரதமை திதி இரவு 8.21 மணி வரை; பிறகு துவிதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 3.32 மணி வரை; பிறகு ரேவதி. யோகம்: சித்த யோகம்

மேஷம்

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் கவனமாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: இன்றைய நாள் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உங்கள் உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழி உறவினர்கள் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும் குடும்பத்தினருடன் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும்‌. உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். சொத்து வாங்குவது விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

வாகன விபத்தில் இளைஞன் பலி! தீவிர சிகிச்சை பிரிவில் தந்தை..!

Next Post

தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்த யுவதி

Next Post
தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்த யுவதி

தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்த யுவதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.