Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் 21-03-2023

March 21, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
இன்றைய ராசி பலன்கள் 16-03-2023
0
SHARES
Share on FacebookShare on Twitter

21.03.2023 செவ்வாய்க்கிழமை சுபகிருது வருடம் பங்குனி மாதம் -7ம் நாள்
நல்ல நேரம் காலை: 7.30 – 8.30; மாலை: 4.30 – 5.30
எமகண்டம் காலை 9.00 – 10.30
இராகு காலம் மாலை 3.00 – 4.30
குளிகை: மதியம்: 12.00 – 01.3

பொது: அமாவாசை. அமாவாசை திதி இரவு 10.53 மணி வரை; பிறகு பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 5.25 மணி வரை; பிறகு உத்திரட்டாதி. யோகம்: மரண யோகம்.

மேஷம்:

மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்

கடகம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். எதை முதலில் முடிப்பது என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரும். கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: மனைவி வழி உறவினர்களால் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பிள்ளைகள் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

துலாம்: உறவினர் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தனுசு: தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: விருந்தினர் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோ சித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.

மீனம்

மீனம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். தேவையற்ற செலவுகளை குறைக்கப் பாருங்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

Next Post

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: வெளியே வந்த குற்றவாளி!

Next Post
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: வெளியே வந்த குற்றவாளி!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: வெளியே வந்த குற்றவாளி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.