Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசி பலன்கள் 16-03-2023

March 16, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
இன்றைய ராசி பலன்கள் 16-03-2023
0
SHARES
Share on FacebookShare on Twitter

16.03.2023 வியாழக்கிழமை சுபகிருது வருடம் பங்குனி மாதம் – 2ம் நாள் வியாழன்

நல்ல நேரம் காலை: 10.30 – 11.30
எமகண்டம் காலை 6.00 – 7.30
இராகு காலம் மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை: 09.00 – 10.30

பொது: தேய்பிறை. நவமி திதி மாலை 4.40 மணி வரை; பிறகு தசமி. மூலம் நட்சத்திரம் காலை 6.24 மணி வரை; பிறகு பூராடம். யோகம்: சித்த யோகம்.

மேஷம்:

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன கருவிகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சின்னச் சின்ன கவலைகள் மன கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மிதுனம்

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அமோகமான நாள்.

கடகம்

மற்றவர்களை நம்பி இருக்காமல் தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். ‌ உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து பிரச்னை நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியும் கூடும் நாள்.

விருச்சிகம்

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதரர்கள் வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

கும்பம்

குடும்பத்தினரின் ஆதரவும் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். ‌மனைவி வழியில் பல வகை உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மீனம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் மற்றும் நண்பர்களும் உங்களுக்கு உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கை‌ பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் பலிதமாகும் நாள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

குடு சலிந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Next Post

யாழ். சர்வதேச விமான நிலையம் – விரைவில் நல்ல செய்தி

Next Post
யாழ். சர்வதேச விமான நிலையம் – விரைவில் நல்ல செய்தி

யாழ். சர்வதேச விமான நிலையம் - விரைவில் நல்ல செய்தி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.