Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்-24.05.2022

May 24, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசி பலன் – 27.03.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.

மிதுனம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டம் இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும் . உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

Tags: FBTTஇராசிபலன்மீனம்மேடம்
Previous Post

The Low Down on Moldovan Mail Order Bride Revealed

Next Post

எரிபொருள் வரிசையில் முந்தியவருக்கு கத்திக் குத்து!- பதுளையில் களேபரம்!!

Next Post
மருத்துவபீட மாணவி எனக் கூறி வீட்டு உரிமையாளரை ஏமாற்றிய யுவதி!! – திருநெல்வேலியில் சம்பவம்!!

எரிபொருள் வரிசையில் முந்தியவருக்கு கத்திக் குத்து!- பதுளையில் களேபரம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.