Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்- 05.07.2022

July 5, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசிபலன்- 18.06.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்

பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மிதுனம்

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உடல்நலம் பாதிக்கும்.வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

துலாம்

குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்‌. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

தனுசு

உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசி, செயல்படுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

கணவன்-மனைவி ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.

மீனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

Tags: இன்றுமீனம்மேடம்
Previous Post

விசேட உரை நிகழ்த்தவுள்ள பிரதமர் ரணில்!

Next Post

3 ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை!

Next Post
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை!!

3 ஆண்டுகளுக்கு அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.