இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31, 2023, சோபகிருது வருடம் ஆடி 13 வியாழக் கிழமை. காயத்ரி ஜெபம் எனும் அற்புத நாள். சந்திரன் கும்ப ராசியில் சதயம் சஞ்சரிக்கிறார். பிரதமை திதி நடக்கக்கூடிய இன்று மரண யோகம் உள்ள நாள். கடக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைத்து மனதிற்கு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்த தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.
உத்தியோகத்தில் மூத்த அதிகாரியுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவைத் தரக்கூடிய நாளாகவும், நீங்கள் எடுத்த காரியத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். அதனால் செலவுகள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் சில புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள். நிதி நிலையை வலுப்படுத்தும். வேலையில் இருப்பவர்கள் இன்று மூத்த அதிகாரிகளின் கோபத்தை சந்திக்க நேரிடலாம்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்க உள்ளதால் மேன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வேலை தேடுவது, வியாபார முயற்சிகள் வெற்றி தரக்கூடிய நாள்.மேலதிகாரிகளின் கோபத்தை சந்திக்க நேரிடும். வியாபாரத்திற்கான சில புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவத் தரக்கூடிய நாளாக இருந்தாலும், உங்களுக்கு சந்திராஷ்டம நாள் என்பதால் அவ்வப்போது மனக்குழப்பங்கள் ஏற்படலாம். அதனால் எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் நிதானமும், கவனமும் தேவை. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
எதிரியின் விமர்சனத்திலும் கவனம் செலுத்தாமல் உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள்.
குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று களத்திரத்தில் ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் கணவன் – மனைவி இடையே சற்று மனக்குழப்பம் இருக்கும். பிரிந்த உறவு ஒன்று சேருவது. திருமண தோஷம் விலகுதல், குழந்தை பாக்கியம் போன்ற விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். இன்று இருசக்கர வாகனங்கள் வாங்குவது, விற்பது, மாற்றுவது தொடர்பான முயற்சிகளில் இறங்கலாம்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடன் தொல்லை தீர லட்சுமி குபேரன் வழிபாடு செய்யலாம். எதிர்பாராத பண வரவு வருவதற்கும், நீங்கள் கொடுத்த கடன் வசூல் செய்வதற்கும் இன்று லட்சுமி குபேர வழிபாடு வெற்றியைக் கொடுக்கும்.
குடும்பத்தில் சில பதட்டங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழி அமையும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் இருக்கும் கேது, எதிரில் இருக்கும் ராகுவினால் மனக்குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். திருமண விவாகரத்து தொடர்பான முயற்சிகளில் சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள். அதில் வெற்றி கிடைக்கும். செல்வம் பெருகும். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள்.
வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபாடு செய்யவும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். இன்று மாலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களைச் சந்தித்தல் போன்ற விஷயங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் செய்யும் வேலை உங்களுக்கு மகத்தான பலனைத் தரும். திடீரென்று குழந்தையின் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
இன்று விநாயகர் வழிபாடு செய்ய விக்கினங்கள் தீரும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிரிந்த தம்பதிகள், குடும்பங்கள் ஒன்று சேருவது தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க இன்று முயற்சி செய்வீர்கள்.
இன்று சிவாலயத்தில் அரிசி தானம் செய்வது நல்லது.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு உற்சாகம் தரும். வேலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இன்று புதிய வேலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் இன்று நல்ல செய்திகள் கிடைக்கும்.
இன்று வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் முடிவடையும். குடும்பச் சூழல் கவலைக்கிடமாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சற்று சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். விரய செலவு காத்திருக்கிறது. சுப விரயங்கள் எதிர்பார்க்கலாம்.
இன்று உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும், உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், வியாபாரத்தில் சிறிது லாபம் கிடைத்தாலும் திருப்தி அடைவீர்கள். மனம் சற்று அலைக்கழிக்கப்படும்.
இன்று குருவிற்குத் தீபமேற்றி வழிபடவும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தியான நாள். கணவன் மனைவி இடையே சிறு, சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். புதுமணத் தம்பதிகள், குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இன்று தன லாபங்கள் உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் கலந்து கொண்டால் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தாரின் உதவியால் சகோதரி திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சிவ ஆலயத்தில் அபிஷேகம் செய்வது நல்லது.
Discussion about this post