மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை கடைசி நாளான இன்று சுமாரான பலனைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு முடிவுக்கு வரும். குழந்தை தொடர்பான விஷயங்களில் ஏமாற்றம் கிடைக்கும். உங்களுக்கும் கொஞ்சம் பதற்றமான நாள். இன்று நீங்கள் கடனை அடைப்பதில் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.

ஜூலை மாதத்தின் கடைசி நாள் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். அரசியலில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். மக்களும் ஆதரவு தருவார்கள். தாயாரின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் எந்தவொரு உறுதியான முடிவையும் எடுப்பீர்கள்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பணியிடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படும் என்றாலும், அது நீங்கி வேலையில் கவனம் செலுத்த முடியும். உங்களின் வேடிக்கையான இயல்பு மற்றவர்களை காயப்படுத்தும் மாணவர்கள் இன்று எந்த போட்டியிலும் வெற்றி பெறலாம். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், ஒரு சொத்து சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யுங்கள்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள், மரியாதையும் கௌரவமும் கூடும். குழந்தைகளின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், குடும்பத்தில் குழந்தைகளுடன் விளையாடி சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை கடைசி நாள் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு இருக்கும், குடும்ப உறுப்பினர்களின் செல்வாக்கு, சம்பள உயரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க சில புதிய திட்டங்களை தொடங்க வேண்டியிருக்கும். சில தேவையற்ற கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். உங்கள் துணையின் ஆதரவால் பிரச்னைகலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள் சுப காரியங்கள் அதிகரிக்கும். வேலை தேடும் இளைஞர்கள் சில வாய்ப்புகளைப் பெறலாம். தொழில் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் சம்பாதிக்க முடியும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் முன் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க தயங்காதீர்கள். குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள் சாதகமான பலன்களைத் தரும். கடந்த சில நாட்களாக தொழில், பரிவர்த்தனைகளில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். நிதி நிலை பலப்படும். அதிக அளவில் பணம் கைக்கு வர வாய்ப்புள்ளதால், பணிகள் வேகமடையும். உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஜூலை கடைசி நாள் சாதாரணமாக இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் முரட்டுத்தனமான நடத்தையால் குடும்ப உறுப்பினர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடன் வாங்க நினைப்பவர்கள் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய நாள். கடன் வாங்கினால் பணத்தை திரும்பப் பெறுவதில் நீங்கள் மிகவும் சிரமப்படுவீர்கள்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் கடைசி நாள் பெரும் வெற்றியைத் தரும். எதிரிகளும் உங்கள் முன்னேற்றத்தைப் புகழ்வார்கள். மாணவர்கள் தேர்வில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவார்கள். அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இன்று ஆன்மிகம், சுப நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று எந்த தகராறு அல்லது சண்டையிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். உங்கள் ஆடம்பரத்திற்காக கொஞ்சம் பணம் செலவாகும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள் சுமாரான பலனைத் தரும். பகைவரால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். ஆனால் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்பதால் கவலைப்பட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உங்களின் கோபத்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
மீனம்:

மீன ராசியினருக்கு ஜூலை கடைசி நாள் கலவையான பலன்களைத் தரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கடன் கொடுத்தால், பணத்தைப் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். பணம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
உடல்நலக் குறைவால் சில பயணங்களைத் தள்ளிப் போட வேண்டியிருக்கும். தந்தையுடன் சில முக்கிய கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் திருமணம் தொடர்பாக பேச்சு எழும்.
Discussion about this post