இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 13 சனிக் கிழமை, சந்திரன் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம் சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மனிதர்க்கு திருப்தியான நாளாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். சந்திரனின் சஞ்சாரம் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு தேவையற்ற விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மகாளய பட்சம் ஆரம்பமான இன்று முன்னோர் வழிபாடு செய்வது நல்லது புரட்டாசி சனிக்கிழமை என்பதால் இன்று அன்னதானம் செய்வதால் பூர்வ புண்ணியங்கள் அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் குழப்பங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். சந்திரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். பல நாட்களாக இருந்த அந்த கவலைகள் நீங்கும். கனவுகள் நிறைவேறும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபம் தரும். மகாளய பட்சம் ஆரம்பிக்க கூடிய இன்று விநாயகர் ஆலயத்தில் அன்னதானம் செய்யலாம்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சந்திர பகவான் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் சற்று மன குழப்பத்துடன் இருப்பீர்கள். உங்களுக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய மற்றும் மனக்குறைபாடுகளுக்கு விநாயகர் ஆலய வழிபாடு செய்வது அவசியம்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தானங்கள் கொடுக்க ஏற்ற நாள். பாகிஸ்தானத்தில் இருக்கக்கூடிய சந்திர பகவான் உங்களுக்கு சாதகமாக இருப்பார். இன்று உங்களுக்கு எடுத்துக் காரியத்தில் வெற்றியும், செயல்களில் மன ஆறுதலும் கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமை ஏழுமலையான் வழிபாடு, அன்னதானம் செய்வது நல்லது.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.இந்த ஒரு முடிவையும் கவனத்துடன் நடக்கும். இன்று விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஏழாம் இடத்தில் சந்திரனின் சம்சாரம் செய்வதால் காதல் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும். உங்களின் மனக்குறை தீர குலதெய்வ வழிபாடு செய்யவும். புரட்டாசி சனிக்கிழமை அன்று ஏழுமலையான் வழிபாடு அன்னதானம் செய்வது நல்லது.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் உங்களுக்கு வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். அலுவலகம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இன்று உங்களின் எதிரிகளின் தொல்லை ஏற்படும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகள் தொடர்பாக மனக்கவலை ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம், படிப்பு தொடர்பாக செலவுகள் செய்ய வேண்டியது இருக்கும். இன்று ஆனந்தமான நாளாக இருக்கும். இருப்பினும் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். இன்று மன அமைதி பெறுவதற்கு ஏழுமலையான் வழிபாடு செய்வது நல்லது.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மகாளய பட்சம் ஆரம்பம். இன்று முன்னோர் வழிபாடு செய்வது நன்மை தரும். குழந்தை வரம் வேண்டும் அவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பல விதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க கூடிய நாளாக இருக்கும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று புரட்டாசி சனிக்கிழமை அன்று ஏழுமலையானின் அனுகூலம் முழுமையாக கிடைக்கும். இன்று சந்திர பகவான் சஞ்சாரம் பலவிதத்தில் நன்மைகளை தருவார். ஏழுமலையானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவதால் குழந்தை பாக்கிய விருப்பம் நிறைவேறும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சிறுசிறு மனுசங்கலம் ஏற்படும். ஆரோக்கிய மேம்படுவதற்கான நாளாக இருக்கும். நீண்ட திற பயணங்களும் நல்ல வெற்றியை தரக்கூடியதாக இருக்கும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். ராசியிலேயே சந்திர பகவான் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றுபடும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மேம்படும். இன்று அலுவலகத்தில் பிச்சைக்காரன் வெற்றி பெறும்.
Discussion about this post