Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்கள் 30-05-2023

May 30, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
சென்னை – இலங்கை கப்பல் சேவை: சற்றுமுன் வெளியான தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

மேஷ ராசிக்காரர்கள் இந்த நாளில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இல்லையெனில் அதனால் வருந்த வேண்டியிருக்கும். இன்றும் சூழல் பல பிரச்னைகளைத் தரக்கூடியதாக இருக்கும். யாரோ ஒருவர் செய்யும் தவறுகளால் உங்கள் வேலையையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

வேலை வியாபாரத்தில் மற்றவர்களின் வற்புறுத்தலுக்குச் செயல்பட வேண்டாம். அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.
பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமையுடன் வேலை செய்யுங்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடினமான சூழ்நிலைகளில் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கலாம். இன்று நீங்கள் எதுவும் செய்யாவிட்டாலும் உங்களுக்கும ரியாதையும், நற்பலனும் அதிகரிக்கும். கொஞ்சம் பாராட்டு கிடைத்தவுடன் ஒரு அகங்கார உணர்வும் வரலாம்.

புத்திசாலித்தனத்துடனும் சாதுரியத்துடனும் வியாபாரத்தில் லாபம் ஈட்டுவீர்கள். இன்று ஒரு சில காரணத்தால் அலைச்சல் இருக்கும். வேலையாட்கள் அல்லது சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போகலாம். இல்லற வாழ்வில் கேலிக்குரியவராக மாறுவீர்கள். இன்று உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம் 

மிதுனம்  இன்றைய ராசி பலன் - Gemini

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றமும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை உண்டு. எனவே வேலையில் நிம்மதி அடைவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கு வருவதற்கான நல்ல நாள் ஆகும்.

கடகம் 

கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டு. நீங்கள் எடுக்கும் எல்லா தொழில் முயற்சிகளும் நல்ல வெற்றியை நோக்கிச் செல்லும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் மனதில் பலவிதமான எதிர்மறை எண்ணங்கள் வரும், அன்புக்குரியவர்களால் ஏற்படும் ஏமாற்றம் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும். பணியிடத்தில் பணியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.​​

சிம்மம்

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

​நண்பர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்பி வருவதற்கான மனோநிலைக்குத் திரும்புவர் விசா தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

அன்னியோன்னியம் மேம்படும் பொருளாதாரத்தில் சிறப்பான நிலையை அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு அல்லது அவை தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள்.

ஆராய்ச்சி படிப்புகள் படித்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தென்படும். படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நாட்கள் தாமதமாக நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.

பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வரவு செலவு நன்றாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் பளிச்சிடுவார்கள்.

​விருச்சிகம் 

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

அன்பர்களுக்கு இன்று திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்புடையதாக இருக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் முயற்சி வெற்றியடைந்து பயணத்தை மேற்கொள்வதற்கு சரியான நாள் ஆகும். இது தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வெளியூரில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். தங்களது உத்தியோகங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். தொழில்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

கருடாழ்வார் வழிபாடு பிரச்சனைகளை தவிர்த்து வெற்றியை நோக்கி உங்களை முன்னிறுத்தும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆகி வெற்றியை நோக்கிச் செல்லும்.

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று அனுசரித்துச் செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு கோவில் குளம் சென்று வருதல் சிலருக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போவது போன்ற சிரமங்கள் இருந்தாலும் நிம்மதி ஏற்படும்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை தவிர்த்து விடுதல் நலம். நிர்வாகத்தின் அழுத்தம் சற்று அதிகமாக இருந்தாலும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

மீனம்

மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

​ஆரம்பக் கல்வியில் இருப்பவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். ஆராய்ச்சித் துறை சார்ந்த உயர் கல்வியை படித்து கொண்டிருப்பவர்களுக்கும் வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும் இவைகளை பயன்படுத்தி கொள்ளவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வர காத்திருப்போருக்கு அரிய சந்தர்ப்பம்

Next Post

பிரபல நடிகையின் சகோதரரை காதலிக்கிறாரா யாஷிகா?

Next Post
பிரபல நடிகையின் சகோதரரை காதலிக்கிறாரா யாஷிகா?

பிரபல நடிகையின் சகோதரரை காதலிக்கிறாரா யாஷிகா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.