இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 29, 2023, சோபகிருது வருடம் ஆடி 12 செவ்வாய் கிழமை. சந்திரன் மகர ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். திரியோதசி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். மிதுன, கடக ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷ ராசியினருக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும், குழந்தைகளால் மகிழ்ச்சியும் உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். இன்று உங்கள் குடும்பச் செலவுகள் திடீரென அதிகரிக்கலாம், அதனால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு இன்று வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற எதிர்பார்த்த விஷயங்கள், பாராட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மன குழப்பங்கள் தீரும்.
மாணவர்கள் வெற்றியை அடைய முடியும். உங்கள் பணியில் தடைகள் உங்களைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடத்த விவாதிப்பீர்கள்.
ஆஞ்சநேயருக்குத் தீபம் ஏற்றி வழிபடவும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். அதே சமயம் இன்று நாள் முழுவதும் திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தினருக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் கவனமாக செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முயலவும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
கடகம் ராசி பலன்

கடக ராசியினருக்கு இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். சந்திரன் 7லும், சுக்கிரன் ராசியிலும் இருப்பதால் காதல் வாழ்க்கையில் இனிமையானதாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இருந்த குழப்பங்கள் தீரும். இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகளும் ஏற்படும். உங்கள் மனதில் மகிழ்ச்சியும், பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசிக்கு இன்று வியாபாரத்தில் புதிய லாபகரமான ஒப்பந்தங்கள் உங்கள் முன் வரும். உங்கள் நிதி நிலையை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் கடின உழைப்பு தேவைப்படும். எதிரிகள் உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியில் சில தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்யலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்க வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்

இன்று உங்கள் தலைமையில் எந்தப் பணி செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களின் பதவி உயர்வும், சம்பளம் உயரவும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் கண்டு இன்று உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்கள் மன அழுத்தம் சற்று குறையும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்கு இன்று உங்கள் தொழிலில் செயல்படுத்தும் எந்த ஒரு புதிய திட்டத்திலும் எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய லாபத்தைத் தரும். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் செய்யும் வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியலில் தொடர்புடையவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களிடன் கடன்கள் அடைக்க முடியும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் இன்று சில பெரிய நன்மைகளைப் பெறலாம். இன்று நீங்கள் குடும்பத்துடனும், சிறு குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. உங்கள் மரியாதையும் அதிகரிக்கும்.
இன்று பணியாற்றும் துறையில் பல லாப வாய்ப்புகள் வரும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மைகள் பெறுவீர்கள்.
தனுசு ராசி பலன்

இன்று கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று பங்குதாரரை நம்பி உங்கள் தொழிலில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம். உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்காக பணம் செலவிட வேண்டியிருக்கும்.
வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பைப் பெறலாம். உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழி அமையும்.
மகரம் ராசி பலன்

உங்களின் சொத்து சம்பந்தமான வழக்குகள், சில பிரச்னைகலில் சிக்க நேரிடலாம். நீங்கள் கூட்டாக வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை தரும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களின் உறவில் இனிமை இருக்கும். உங்கள் வேலைகள் தொடர்பான விஷயங்களில் உங்கள் சக ஊழியர்களின் உதவியைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பான ஒரு முடிவை எடுக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கும்பம் ராசி பலன்

இன்று வியாபாரம் சம்பந்தமாக திடீர் பயணம் செல்ல நேரிடலாம். இன்று உங்களின் எந்த ஒரு செயலிலும் கவனமாக செயல்பட வேண்டும். இன்று வணிக ரீதியாக நல்ல நாளாக இருக்கும். இன்று உடல்நிலையில் சில குறைபாடுகள் ஏற்படலாம். எனவே உங்கள் உணவு, பானத்தின் மீது கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். குடும்ப நிகழ்ச்சி தொடர்பான எந்த முடிப்பதிலும் அவசரம் காட்ட வேண்டாம்.
மீனம் ராசி பலன்

உங்கள் குடும்ப உறுப்பினர்களால் இன்று உங்களுக்கு சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். பொறுமை மற்றும் மென்மையாகவும் செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் ஆசியுடன் இன்று எந்த ஒரு வேலையை ஆரம்பித்தாலும் அதில் வெற்றி நிச்சயம். உங்கள் செயலில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் லாபம் கிடைக்கும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பது, வாங்குவது வேண்டாம்.
Discussion about this post