இன்றைய ராசிபலன் செப்டம்பர் 28, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 10 வியாழக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள ஆயில்யம் சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் உண்டு. இன்று ஓய்வு கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். மன திருப்தி கிடைக்கும். இன்று தேவையற்ற செலவுகள் குறைத்துக் கொள்வது அவசியம். நண்பர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவானின் சஞ்சாரம் கும்ப ராசியில் இருப்பதால் உங்களுக்கு மனக்குழப்பத்தைத் தரக்கூடிய நாளாக இருக்கும். உறவினர்களால் மனக்கவலை, மனக்கசப்பு ஏற்படலாம். குழந்தைகள் விவகாரத்தில் மன கஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். குடும்ப சொத்து கிடைத்தல், குழந்தைகளின் மூலம் நல்ல செய்தி கிடைத்தல் என சாதகமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய நாள். இன்று மாலை நேரத்தில் நவகிரகத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்யவும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ள நாள். அதனால் நாள் முழுவதும் இன்று கூடுதல் கவனத்துடன் எந்த ஒரு வேலையையும் செய்வது நல்லது.
காலையில் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய மன ஆறுதல் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கும்பத்தில் இருக்கும் சந்திரனின் அமைப்பால் கணவன் – மனைவி ஒற்றுமை ஓங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டு. தூக்கமின்மை பிரச்னைகள், உடல் நல பிரச்னைகள் தீரும்.
இன்று தன்வந்திரி வழிபாடு செய்வது நல்லது.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனக் குழப்பம் இருக்கும். நண்பர்களின் மூலம் குழப்பம் ஏற்படும். 6ல் சந்திரன் இருபதால் இன்று செலவுகள் அதிகரிக்கும். வரவை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மனக்குழப்பம் இருக்கும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியமான நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் சிலருக்கு ஏற்படும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நன்மையைத் தருவதாக இருக்கும். மாலை நேரத்தில் நண்பர்களின் வருகையால் உங்களின் மனக்குழப்பம் தீரும். அவர்களின் ஆதரவு வேலைகளை முடிக்க உதவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நண்பர்களால் தொல்லைகள் ஏற்படலாம். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் மூலம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் வரலாம். இன்று புதிய நண்பர்களை தவிர்க்கலாம்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குறைகள் இல்லாத நாளாக இருக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் சிலருக்கு நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும்.
இன்று ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சற்று சோம்பேறித்தனமான நாளாக அமையும். குடும்பத்தில் இருக்கு பிரச்னைகள் தீரும். பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது.
ஏழரை சனி உள்ளதால் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் இருக்கும் சந்திரனால் மனக்குழப்பங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்னைகள், சண்டைகள் தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆன்மிகத்தின் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.
இன்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். பல நாட்களாக குடும்பத்தில் உள்ள பிரச்னை தீர்க்க எதிர்பார்த்த நல்ல தீர்வு கிடைக்கும். இன்று உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடும், அன்னதானமும் செய்ய இன்று சிறந்த நாள்.
Discussion about this post