மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் இருந்த கவலைகள் நீங்கும். வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். இதற்கு அனுபவமுள்ள ஒருவரிடமிருந்து ஆலோசனை கிடைக்கும். உங்கள் வேலைகளை செய்து முடிப்பதற்கு கடினமான நாளாக இருக்கும். அதனால் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்க வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டியது இருக்கும்.
ரிஷபம்
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாள் ஆகும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும். சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் நேரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்.
மிதுனம்
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடையும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு பலருக்கு உருவாகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
கடகம்
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும்.
ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வாகன வகையில் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயதானவர்களுக்கு மூட்டு வலி மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம் இருப்பினும் இவற்றிலிருந்து எளிதாக வெளிவந்து விடுவீர்கள்.
சிம்மம்
நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது வரலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு.
புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். வெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் ஆதாயம் தருவதாக அமையும்.
கன்னி
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கடந்த இரு நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தன வரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலான கவனம் தேவை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. முருகப் பெருமான் வழிபாடு உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு விசா தொடர்பான காரியங்களை துவக்க நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றியடைவார்கள்.
விருச்சிகம்
இன்று சிறப்பான விஷயம் ஒன்றை அடைய கடினமாக உழைப்பீர்கள். வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவீர்கள். . அன்பானவருக்கு கஷ்டத்தில் உதவி செய்வதால் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்மறையான செயல்பாடு உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள்; இல்லையெனில் உங்கள் சுயமரியாதை பாதிக்கப்படும்.
திடீர் செலவுகள் வரலாம். முடிவெடுப்பதில் சிக்கல் இருந்தால், ஒரு பெரியவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும்.
தனுசு
அவசரப்படுவதற்கு பதிலாக, உங்கள் வேலையை அமைதியாக முடிக்க முயற்சி செய்யுங்கள். அனைத்து பணிகளும் சரியாக முடிவடையும். உங்கள் நல்ல மனப்பான்மையும் சீரான சிந்தனையும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.
அதிக சிந்தனை உங்கள் வேலையில் அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் எந்த வேலையையும் சரியான திட்டமிடலுடன் செய்வது அவசியம். கர்வம் கொள்வதோ, தன்னை உயர்ந்தவராகக் கருதுவதோ சரியல்ல. மார்க்கெட்டிங் பணிகளை முடிக்க இதுவே சிறந்த நேரம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.
மகரம்
நேயர்களுக்கு புதிய தொழில் முயற்சிகளை தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.
உத்தியோக உயர்வு உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச் சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறனுடன் கையாண்டு வெற்றி அடைவார்கள்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முக்கிய முடிவும் நல்லதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். அதீத நம்பிக்கை உங்களை சிக்கலில் மாட்டிவிடும். சூழ்நிலைகளை நிதானமாக கையாளுங்கள்.
முக்கிய விஷயத்தை மற்றவர்களிடம் பரிமாறும் போது எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். முதலீடு செய்வதற்கு நேரம் சாதகமாக இல்லை. வியாபார நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது முக்கியம்.
மீனம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் நிர்வாகத்தின் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
குடும்பத்தில் அமைதி தவழும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் எதிர்காலத்தைப் பற்றிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகளை மனதில் வரும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
Discussion about this post