மேஷம்

மேஷ ராசியினர் நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பது குறித்து சிந்திப்பீர்கள். மாணவர்களுக்கு தேர்வு கட்டம் நடந்து வருவதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் அதிக நேரம் செலவிட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியடையச் செய்யும். குடும்பப் பதற்றம் தொல்லை தரலாம். சில சிறு மன அழுத்தம் தரக்கூடிய சூழல் இருக்கும். தந்தையின் அறிவுரை மேன்மை தரக்கூடியதாக இருக்கும்.
ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியாக சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். அதன் மூலம் அதிக லாபம் மற்றும் பொருளாதார நிலை வலுவாக வாய்ப்புள்ளது. ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்பினால் அதன் மூலம் முழு பலன் கிடைக்கும். ஆன்மிக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தையின் செயல்பாடு மகிழ்ச்சியைத் தரும். அக்கம்பக்கத்தில் ஏதேனும் தகராறு ஏற்படலாம். உங்கள் பேச்சில் கவனம் தேவை.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிதாக ஒன்றைச் செய்ய முயல்வார்கள். அதேசமயம் புதிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மதியத்திற்குப் பிறகு சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
வணிகர்கள் சில புதிய ஒப்பந்தங்கள், புதிய திட்டங்கள் செயல்படுத்தி அதில் வெற்றி காண்பீர்கள். இது எதிர்காலத்தில் நல்ல பயனளிக்கும். தேர்வில் வெற்றி பெற, மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். பெற்றோர், பெரியோரை மதித்து நடப்பதும், அவர்களின் ஆசி பெற வேண்டிய நாள்.
கடகம்

கடக ராசிக்காரர்களின் குடும்பத்தில் ஏற்படும் தகராறு மன கவலையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு பராமரிக்க முயலவும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பாராட்டு, பரிசு கொடுத்து இணக்கமாக வேண்டிய நாள்.
உங்கள் வியாபாரத்தில் எந்த ரிஸ்க் எடுப்பதையும் தவிர்ப்பது அவசியம். நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தைக் கழிப்பீர்கள். உங்கள் செயல்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரம், தொழில் போன்றவற்றில் புதிய யோசனைகளை உடனே முன்னெடுத்துச் செல்லுங்கள். அதன் பலன் நிச்சயம் கிடைக்கும். இன்று, சில காரணங்களால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படலாம். இன்று ஒரு நண்பரால் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
கன்னி 
கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் லாபம் கிடைக்க நேர்மையாக உழைக்க வேண்டிய நாள்.
மற்றவர்களுக்கு உதவக்கூடிய மன நிலையில் இருப்பீர்கள். எந்த ஒரு வேலையும் உங்கள் மனதிற்கு பிடித்து செய்யும் போது அதன் முழு பலனைப் பெற்று மகிழ்வீர்கள். மும்முரமாக உங்கள் வேலைகளுக்கு மத்தியில் காதல், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள், வியாபாரத்தில் சில சுப தகவல்களைப் பெறலாம். நீண்ட காலமாக காத்துக் கிடந்த ஒரு ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியம் உங்கள் வேலையை பாதிக்கக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வீட்டுச் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும், இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேன்மை தரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
குடும்பத்தில் விருந்து, சுப நிகழ்ச்சி நடக்கக்கூடிய நாள். மாலையில், நீங்கள் விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்றூ நீங்கள் செல்வாக்கு மிக்க நபர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமான வேலைகளின் இருந்த கவலைகள் நீங்கும்.
தனுசு

இன்று தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும், உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். கடன் வாங்குவது, கொடுப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். செலவுகள் அதிகமாக வாய்ப்புள்ளது. உங்கள் விருப்பத்திற்கு மாறான வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் தேவை. ஒருவரின் ஒத்துழைப்பால் அனைவரும் பயனடையலாம்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தில் தகராறு ஏற்படலாம், எனவே நீங்கள் மன வருத்தம் அடைய வாய்ப்புள்ளது. யாருக்காவது கடன் கொடுக்க நினைத்தால் கவனமாக சிந்தித்து செயல்படவும். பணியிடத்தில் உங்கள் நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்காக சில பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும்.இன்று நீங்கள் நாள் முழுவதும் நிறைய வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும். அதனால் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்யவும்.
கும்பம் 
கும்ப ராசி மாணவர்கள் இன்று கல்வியில் சில நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். இன்று குழந்தையின் ஆரோக்கியத்தில் சிறிது குறைவு ஏற்படலாம், எனவே எச்சரிக்கையாக இருக்கவும். பணிபுரிபவர்கள் வேலையில் குழுவாக சேர்ந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சில தகராறு ஏற்படலாம். அதனால் இன்று பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. உங்கள் வருமானத்தையும், செலவையும் கவனித்துச் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று முயற்சி செய்தால் தடைப்பட்ட வேலைகள் நண்பரின் உதவியால் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். கவனக்குறைவால் வேலைகள் பாதிக்கும்.
வெளியில் நண்பர்களுடன் ஆடம்பரமாகச் செலவழிப்பதைத் தவிர்த்து, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது மிகுந்த பலனைத் தரும். நீங்கள் கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
Discussion about this post