இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 25, 2023, சோபகிருது வருடம் ஆவணி 8 வெள்ளிக்கிழமை. சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள நாள்.
மேஷம் ராசி பலன்

இன்று மேஷ ராசியினருக்கு சந்திராஷ்டமம். மேஷ ராசியினர் குறிப்பாக கிருத்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். இன்று மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும். குழந்தைகளால் பெருமையும், சந்தோஷமும் ஏற்படும். கலைஞர்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள். வியாபாரிகள் வரவு, செலவுக் கணக்கில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷப ராசி பலன்

ரிஷப ராசி நேயர்கள் இன்று 6ல் இருக்கும் கேதுவால் தன லாபங்கள் பெறுவீர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதறகான முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணம் சிறப்பான பலனைத் தரும். இன்று ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்

இன்று மனதிற்கு திருப்திகரமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சில விஷயங்களில் இருந்த தடை நீங்கும், குழப்பங்கள் தீரும். இன்று மனதில் இருக்கும் பாரங்கள் தீரும். இன்றைய நாளில் மாலை நேரத்தில் லட்சுமி குபேர பூஜை செய்யவும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி நேயர்கள் இன்று வேலைப்பளு அதிகம் இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளினால் சற்று மனக்குழப்பம் இருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வழக்குகள், விசாரணைகள் இருப்பின் இன்றைய நாளில் ஒத்திப் போடுவது நல்லது. இன்று கடக ராசியினருக்கு மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனை, ஆதரவு நன்மை தரும்.

சிம்ம ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் நல்ல ஒரு உற்சாகமான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருமை மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று மறதி காரணமாக சில பொருட்களை தவற விட வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் பொருட்களை பத்திரமாக பாதுகாக்கவும். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள நினைப்பவர்கள் விநாயகர் வழிபாடு செய்வதும், சிதரு தேங்காய் உடைத்து பயணம் செய்வது நல்லது.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் மன நிறைவை தரும். உங்களின் உடல் ஆரோக்கியத்திலும், வீட்டில் பெரியவர்களின் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டிய நாள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருந்த வேலைகளை முடிக்க முடியும். மனதிற்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி நேயர்கள் இன்று லட்சுமி நாராயண பெருமாளை வணங்குவது நல்லது. இன்றைய வரலட்சுமி நோன்பு என்பதால் மகாலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பானது. இன்று உங்களின் கடன் தொல்லைகள், நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய வழக்கு, விசாரணைகள் தீர்வு கிடைக்கும். அதனால் மன மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் மனதிற்கு திருப்தி தரக்கூடிய நாளாக அமையும். பல நாட்களாக குடும்பத்தில் பகையாக அல்லது பிரிந்து இருந்த நபர்கள் மீண்டும் குடும்பத்தில் வந்து சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சந்திரன் உங்களின் ராசியிலேயே சஞ்சரிப்பதால் மனதிற்கு நிறைவான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த குழப்பங்கள் தீரும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் சிறப்பான நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பல ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் சந்திக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் மூலம் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
மகரம் ராசி பலன்

மகர ராசி நேயர்கள் இன்று நாள் முழுவதும் நல்ல செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொல்லைகள் தீரும். கடன் தொல்லை தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். இன்று சந்திரனின் அமைப்பு உங்களுக்கு தொழில், வியாபாரத்தில் லாபத்தை தரக்கூடியதாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி நேயர்கள் இன்று அலைச்சல் அதிகமாக இருக்கும். புதிய வேலை தேடுதல், மாற நினைப்பவர்கள் அதற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று விநாயகர் வழிபாடு செய்வதும், குல தெய்வ வழிபாடு செய்வதும் நல்லது.
நீண்ட நாட்களாக பணியில் இருந்த குழப்பங்களும், உயர் அதிகாரிகளுடன் அதிகரிப்பதோ, குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் இன்றைய தினத்தில் எந்த ஒரு முடிவுகளை எடுக்காமல் இருப்பதும், பொறுமையுடன் கையாள்வது நல்லது.
மீனம் ராசி பலன்

மீன ராசி நேயர்கள் இன்று நேர்மறையான சிந்தனையுடன் கூடிய நாளாக இருக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். சந்திரனின் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு நல்ல வருவாயும், பெற்றோர் வீட்டின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
வெள்ளிக் கிழமையான இன்று சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து வணங்கலாம். லட்சுமி நாராயண பெருமாளை வணங்க நாள் அற்புதமானதாக இருக்கும்.
Discussion about this post