இன்றைய ராசிபலன் செப்டம்பர் 22, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 5 வெள்ளிக் கிழமை. விருச்சிக ராசியில் கேட்டை, மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமி திதி நடக்கக்கூடிய இன்று முழுவதும் சித்த, அமிர்த யோகம் உள்ள நாள். மேஷ ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்திற்குச் சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இன்று திருப்தியான நாளாகவும், தெய்வத்தின் அனுகிரகம் மிக்க நாளாக அமையும். அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு குறிப்பாக பெண்களுக்குப் பிறந்த விட்டால் நன்மைகள் ஏற்படும். அஷ்டமி திதி என்பதால் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடலாம்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால், மனதிற்குக் குழப்பமான நாளாக இருக்கும். குறிப்பாக கிருத்திகா, ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கவனமாக இருக்கவும்.
இன்று பசுமாடுகளுக்கு உணவளிக்கவும். சந்திரன் 8ல் இருப்பதால் குடும்பத்தில் மன கிலேசம் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம். அஷ்டமி திதியான இன்று பைரவருக்கு தீபம் ஏற்ற உடல் நலம் மேம்படும். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் இருக்கும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால், கணவன் மனைவி இடையே உறவு வலுவாக இருக்கும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. இன்று பிள்ளைகளின் தொல்லை தீரும். அவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சுப விரயங்கள் ஏற்படலாம்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகமான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆறாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவானால் உங்களுக்கு தன லாபங்கள் அதிகரிக்கும். பணம் கொடுத்தல், வாங்குதல், தங்கம், வெள்ளி என ஆபரணங்கள் வாங்கக்கூடிய சாதகமான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு மனநிறைவான நாளாக இருக்கும்.
காலையில் விநாயகர் வழிபாடு செய்வது அவசியம்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவை தரக்கூடிய நாளாக இருக்கும். அதே சமயம் நீங்கள் நினைத்த வேலையில் சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் கடன் கொடுப்பதும், வாங்குவதையோ தவிர்ப்பது அவசியம்.இன்று மன அழுத்த சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். குறிப்பாக சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம். விசாக நட்சத்திரக்காரர்களுக்கு லாபங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பெற்றோருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் சார்ந்த நபர்கள் பேச்சில் கவனம் தேவை. சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனத்திருப்தி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பங்கு சந்தை முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இன்று மன நிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். காலை வேளையில் உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அஷ்டமி திதியான என்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு பெற்றோர் வீடு மூலம் நன்மைகள் கிடைக்கும்.குழந்தை பாக்கியம் எதிர்பார்க்கக் கூடிய தம்பதிகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களின் செயல்களில் நல்ல வெற்றி கிடைக்கும். இன்று சில புதிய செலவுகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று சக ஊழியர்களால் குற்றம் சாட்டப்படலாம். திருமணமானவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இருப்பினும் சந்திர பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு மனநிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் மிகுந்த நாளாக இருக்கும். அதே சமயம் தீராத பிரச்சனைகள் தீரக்கூடிய சிறப்பான நாளாக இருக்கும். இன்று நண்பர்களுக்கு உதவக்கூடிய நாளாக இருக்கும். இன்று மனபாரம் தீரக்கூடிய நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன கவலை தீரக்கூடிய நாள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப சிக்கல்கள், குடும்ப பாரங்கள் நீங்க கூடிய நாள்.
இன்று நீங்கள் காலை வேளையில் விநாயகருக்கு தீபம் ஏற்றி, மாலை சாற்றி வழிபடுவதும் நன்மை தரும். எடுத்துக் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் பேச்சின் இனிமையை நீங்கள் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அது உங்கள் உறவில் விரிசலை உருவாக்கலாம். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும்.நிதி நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெறுவார்கள்.
Discussion about this post