மேஷம்

இடமாற்றம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பார்கள் அவைகளில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் வெளிநாடு பயணம் மேற்கொண்டது சிறந்த மற்றும் பாதுகாப்பான பயணமாகவே அமையும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்

குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்துவரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று காலதாமதமாக காண்பார்கள். இருப்பினும் இறுதியில் வெற்றி உண்டாகும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தங்கள் பணிகளில் மனநிறைவை காண்பார்கள்.
மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி வடிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அது தொடர்பான வைத்தியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய்நாடு திரும்ப திட்டமிட்டால் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்துடன் ஒன்று சேர வாய்ப்பு உண்டாகும்.
கடகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சந்திப்புகள் உண்டு.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் உண்டாகும் ஒருசிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு அமைப்பு உண்டாகும். பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். ஆதாயம் பெறும் அமைப்பு உண்டு என்பதால் உங்கள் பிரயாணத்தை முன்னெடுக்கலாம்.
சிம்மம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும்.
கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு.
உத்தியோகத்தில் மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள்.
துலாம்

கல்வி நிலை மேம்படும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தங்களது தொழிலில் மிகுந்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். படிப்பை முடித்து தொழிலுக்காக அல்லது வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தீர்வுகள் ஏற்படும்.
விருச்சிகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
மாணவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும் புதிய கல்வி வாய்ப்புகள் அவர்கள் கண் முன் வந்து நிற்கும் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான நல்ல நாள் ஆகும்.
தனுசு

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். வாகன வகையில் சுபச் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களை திட்டமிடுவீர்கள்.
ஒரு சிலருக்கு கடன் படக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும் இருப்பினும் வெற்றி நிச்சயம் உத்தியோகத்திற்காகவும் தொழிலுக்காகவும் அலைச்சல்களைச் சந்திக்கும் நாள் ஆகும். கூடுதலான வேலைப்பளு உண்டாகும் இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
மகரம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் பெண்களுக்கு இனிமையான நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
கும்பம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் ஆக்கம் தரும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
மீனம் 
சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
நல்ல தகவல்கள் வந்து சேரும் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான காரியங்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மேன்மை அடைய கூடிய நாள் ஆகும்.
Discussion about this post