இன்றைய ராசிபலன் செப்டம்பர் 21, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 4 வியாழன் கிழமை. விருச்சிக ராசியில் அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சஷ்டி திதி நடக்கக்கூடிய இன்று முழுவதும் சித்த யோகம் உள்ள நாள். மேஷ ராசியில் உள்ள பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்குச் சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் நீசம் பெற்றிருப்பதால், இன்று மனக்கிலேசம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் கருத்து வேறுபாடுகள், மருத்துவ செலவுகள் குறைய சஷ்டி திதியில் முருகப் பெருமானை வணங்குவது நல்லது.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். சந்திரன் 7ல் இருப்பதால் காதலர்களுக்கு எதிர்பாராத நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் திருப்பமும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சஷ்டி திதி என்பதால் முருகப் பெருமான் வழிபாடு செய்யவும். செவ்வாய், குருவின் அருளால் உங்களுக்கு நல்ல வெற்றியை தருவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடன் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் அனுகூலமாக இருக்கும். அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது. பண வருவாய்க்கான வழிகள் பிறக்கும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி நாதன் சந்திரன் நீசம் பெற்றிருப்பது உங்களுக்கு மனக்குழப்பத்தைத் தரும். மாலை நேரத்தில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. வழக்கு, விசாரணைகளில் வெற்றியே கிடைக்கும். இன்று நண்பர்களை சந்திப்பது அவர்களின் ஆலோசனைகள் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரும் நாள். நீண்ட தூர பயணம் சிலருக்கு ஏற்படும். இந்த நேரத்தில் உங்களின் உடைமைகளைக் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 4ல் சந்திரன் நீசமாக இருப்பதால் வண்டி, வாகன, சொத்து சார்ந்த விஷயங்களில் குழப்பங்கள் வரலாம். விநாயகர் வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மனக் குறைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. குழந்தைகளால் மன குழப்பம் ஏற்படலாம். ஆகவே காலையில் குல தெய்வ வழிபாடு செய்யவும். ராசியில் சூரியன், செவ்வாய் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பிரச்னையை தரும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்னைகளிலிருந்து வெளிவரலாம். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. இன்று புதிய நண்பர்களால் குழப்பம் ஏற்படும். காலையில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. புதிய நண்பர்களால் சில பணவிவகாரங்கள் ஏற்படும். பள்ளிகொண்ட பெருமாளை வணங்கவும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ராசியில் சந்திரன் இருப்பதால் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். குழந்தை வரம் வேண்டுவோர் இன்று சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமான் வழிபாடு சென்று தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும். கடன் கொடுத்தல், வாங்குதல் தொடர்பான பிரச்னைகள் தீர இன்று நரசிம்ம பெருமாளை வணங்கலாம்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு குழப்பமான நாளாக இருக்கும். பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறை ஏற்படலாம். பெற்றோர்களிடம் வாக்குவாதம், சண்டை மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். 10ல் இருக்கும் சூரியன் – செவ்வாய் சேர்க்கையால் அரசு அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்னைகள் வரலாம். ஆகவே இன்று தட்சிண மூர்த்தியை வழிபடவும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சோம்பேறித்தனத்தை விடுத்து, சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை இருந்தாலும் சோம்பேறித்தனத்தால் வேலைகள் செய்வதில் தாமதம் ஏற்படும்.
குழந்தைகள், பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது. பெரியவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரக்கூடிய நாள். சந்திரன் 10ல் இருப்பதால் வேலை தொடர்பாக அலைச்சல் அதிகமாக இருக்கும். வண்டி, வாகனம் பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக செல்லவும். வழக்கு, விசாரணைகள் இருப்பின் அவற்றை ஒத்திப் போடுவது நல்லது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் குறைகள் தீர நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். சந்திரனின் அமைப்பு உங்களுக்கு மனக்குழப்பத்தைத் தந்தாலும், நாளின் இறுதியில் வெற்றியைத் தரும். நாள் முழுவதும் அலைச்சல்கள் இருக்கும். விசாரணைகள், வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. கணவன் – மனைவி இடையே மனக்கிலேசம் இருந்தாலும், மலை நேரத்தில் ஒற்றுமை மேம்படும்.
Discussion about this post