Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்கள் 19-04-2023

April 19, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான பலன் தரக்கூடியதாக இருக்கும். இன்று சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மக்களின் ஆதரவு, அன்பு கிடைக்கும். உங்கள் நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இன்று ரியல் எஸ்டேட் துறையில் லாபம் அடைவீர்கள். உங்கள் தாய்க்கு உடல்நல பிரச்சனைகள் வரலாம். கவனம் தேவை.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. எந்த வேலையைச் செய்தாலும் கவனமாகவும், எதிரிகள் விஷயத்தில் சூதானமும் தேவை. அவர்கள் உங்கள் நன்மதிப்பைக் கெடுக்க வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான எந்த பிரச்சனையும் இன்று முடிவுக்கு வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாகும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று, மற்றவர்களிடம் சிக்கியுள்ள உங்கள் பணம் மீட்க சாதகமான நாள். உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, வசதிக்காக கொஞ்சம் பணம் அதிகமாக செலவழிப்பீர்கள்.

வேலையில் கவனமாக செய்தால் நல்ல வெற்றியைப் பெற்றிடலாம். இன்று நீங்கள் உங்கள் நடத்தை மற்றும் உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரியளவில் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். கடின உழைப்பால் மட்டுமே உங்கள் வேலையை வெற்றிகரமாக செய்ய முடியும். இன்று உங்கள் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. சரியான திட்டமிடலுடன் வேலையை செய்யவும். இறை வழிபாடு, பெரியவர்களின் ஆசி பெறுவது நல்லது.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் இன்று சமயப் பணிகளில் ஈடுபடுவது நல்லது. இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். இன்று சோம்பலை விடுத்து உங்கள் வேலையை செய்து முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். குடும்பத்திலும், பணியிடத்திலும் அனுசரித்துச் செல்வது அவசியம். உங்களின் வியாபாரத்தில் லாபம் பெற புதிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய நாள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் சில காலமாக உடல் நல பிரச்சினையால் போராடிக்கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து மீள்வீர்கள். உங்களுக்கு செல்வமும் பெருகும். இன்று உங்கள் பிரச்சனையில் நண்பர்களின் உதவி கிடைக்கும். இதனால் மனம் மகிழ்ச்சி அடையும். உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். குழந்தைகளின் தொடர்பான மன குழப்பம் தீரும்.
புதன் வக்ர பெயர்ச்சி (ஏப்ரல் 21) : ராஜ வாழ்க்கை வாழப்போகும் 5 ராசிகள்

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பரபரப்பாகவும், அலைச்சலும் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். உங்கள் வியாபாரத்தின் புதிய உத்திகள் வெற்றி பெற உதவும். இன்று உங்கள் வேலை குறித்து மற்றவர்கள் குற்றம் சாட்ட வாய்ப்புள்ளது. உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையாக போராட வேண்டியது இருக்கும். இன்று வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாள் கலவையானதாக இருக்கும். இன்று உங்களுக்கு வருமானத்தை விட அதிக செலவு செய்யும் சூழ்நிலை இருக்கும். எனவே நீங்கள் யோசித்துச் செயல்படவும். இது வருகாலத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.

இன்று உங்கள் பிள்ளைகள் வகையில் மரியாதை அதிகரிக்கும். மாலையில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள். இன்று உங்கள் பொறுமையின் மூலம் எதிரிகளை வெல்வீர்கள். மாணவர்களுக்கு இன்று மூத்தவர்களின் ஆலோசனை தேவைப்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டிய நாள். இன்று உங்கள் குடும்பத்தில் நடக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியாகவும், அனுசரித்துச் செல்வதும் அவசியம்.

இது உங்கள் மன அழுத்தம் தருவதாக இருக்கும். கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று தாய்வழி உறவுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் நிதானம் அவசியம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் முன்னோர்களின் சொத்து கிடைக்க வாய்ய்ப்பூள்ளது. இன்று நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். நீங்கள் யாருக்கும் அறிவுரை கூறுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில புதிய உத்திகளை செயல்படுத்துவீர்கள். இது எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் உறுதுணையாக இருக்கும் என்பதா இன்று தடைப்பட வேலையை முடிக்கவும், வரவேண்டிய பணம் திரும்ப பெற சாதகமான நாள். வருமானத்தை அதிகரிக்க இன்று எந்த ஒரு வேலையையும் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் தொழிலில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை சாதகமாக அமையும். இன்று குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறைபாடு மன கவலையைத் தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் இன்று முடிவடையும். இந்த மாலை நேரத்தில் நீங்கள் எந்த விவாதத்திலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsஇராசிபலன்
Previous Post

கோர விபத்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி!

Next Post

இலங்கை குரங்குகளை சீனாவில் கோருவது யார்?

Next Post
இலங்கை குரங்குகளை சீனாவில் கோருவது யார்?

இலங்கை குரங்குகளை சீனாவில் கோருவது யார்?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.