மேஷம்

நேயர்களுக்கு இன்றைய நாள் வருமானத்தைத் தரக்கூடிய நல்ல நாளாக அமையும் பெண்களுக்கு சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.
விநாயகர் வழிபாடு விக்கினத்தை தீர்க்கும் எதிர்பார்த்த பணம் வரும் கடனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி கொடுக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியை கொடுக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும் சிறந்த நாளாகும்.
ரிஷபம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டு. ஒரு சிலர் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஆதாயம் பெறுவார்கள்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நல்ல தகவல்கள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய பண உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் வாய்ப்புகளும் உங்கள் கண் முன் வந்து நிற்கும்.
மிதுனம்

நண்பர்களுக்கு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும் தகவல் தொழில்நுட்பத் துறை பத்திரிக்கைத் துறை பத்திரப்பதிவு கணக்குத் துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக செல்லும்.
புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை தொடர்பான தகவல்கள் சற்று காலதாமதம் ஆகும் இருப்பினும் நாளை நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.
கடகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையில் இருக்கும்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாடாக இன்றைய நாள் அமையும். கணவன் மனைவி உறவு மேம்படும். அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
சிம்மம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாள் ஆகும். வெளிநாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் மிகுந்த நாடாக இருக்கும். உயர்கல்வி படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாடு பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
கன்னி 
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச்சிறந்த நாளாகவே இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை அல்லது நீங்கள் விருந்தினராக செல்வது போன்ற இனிய நிகழ்வுகள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேம்படும்.
கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக மாறும் விநாயகர் வழிபாடு மேலும் வெற்றியை குறிக்கும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
ஆனி மாத நட்சத்திர பலன் : சிம்மம் கன்னி ராசிக்கான ஆனி மாத பலன்
துலாம்

வயதானவர்களுக்கு உடல் நலம் சீராக இருந்துவரும் புதிய வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் பற்றிய சிந்தனையும் செயல்பாடுகளும் ஏற்படும். அவைகளில் வெற்றியும் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உத்தியோகத்தில் சற்று அலைச்சல்களைக் கொடுக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்

நண்பர்களுக்கு வீண் அலைச்சல்களையும் புதிய ஒப்பந்தங்களையும் புது முயற்சிகளையும் தவிர்த்துக் கொள்வது தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து உங்களை வெளிக்கொண்டுவரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வீர்கள்.
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் செய்யும் தொழிலில் மேன்மை கிடைக்கும் புது தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக உணவுத்துறை சுற்றுலாத்துறை பிரின்டிங் விஷுவல் மீடியா கலைத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றி தரும் நாளாக இன்றைய நாள் அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டு.
மனைவி உறவு மேம்படும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் வயதானவர்களுக்கு உடல் நலம் சீராக இருந்துவரும் உங்கள் பேச்சிற்கு மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். அவைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் உடல் நலம் சீராக இருந்துவரும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தங்களது குடும்பங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
சுப காரியத்தை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் சார்ந்த பிரயாணங்களை பற்றி சிந்தனை கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு செய் தொழிலில் மேன்மை உண்டாகும்.
கும்பம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் வங்கி தொழில் விஷுவல் மீடியா மற்றும் பிரிண்டிங் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும்.
மீனம்

வாகன வகையிலும் சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும் மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட வகையிலும் நல்ல முன்னேற்றங்களை தருவார்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவர். வெளிநாடு அல்லது வெளியூர் பிரயாணங்கள் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.துர்க்கை வழிபாடு நலம் தரும்.
Discussion about this post