மேஷம்

பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்

ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.
பெண்களுக்கு இனிய நாளாக இந்த நாள் அமைந்தாலும் நாளின் பிற்பகுதியில் சற்று விட்டு கொடுத்து செல்வது குடும்ப அமைதியே மேம்படுத்தும் குடும்பத்தில் அமைதி நிலவும். பிற்பகலில் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் புதிய நட்புகள் உருவாகும்.
மிதுனம்

வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும். தன வரவு உண்டாகும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கடகம்

புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் சற்று இழுபறியாக செல்லும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான தொரு காலம்.
சிம்மம்

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு. உடல் அசதி அதிகமாக இருந்து வரும். தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு.
கன்னி

வார்த்தையை அளந்து பேசுவது நல்லது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது.
தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும்.
துலாம்

திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்.
ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவற்றில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.
விருச்சிகம்

சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும் வழியை எளிதாக்கும். வயோதிகர்களுக்குச் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
அதிக நேரம் டிவி மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும்.
தனுசு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக முடிப்பார்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் தொழில் முயற்சிகள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் சற்று கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது.
மகரம்

எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை.
தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.
கும்பம்

மாணவர்களின் கல்வி மேம்படும். வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
கடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் மன மகிழ்ச்சி உண்டு.
மீனம்

கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
விநாயகப் பெருமானை வழிபடவும். புதிய தொழில் முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நட்பில் கவனம் தேவை.
வேலை தேடுபவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும் நாள் ஆகும்.
Discussion about this post