மேஷம்

வீட்டிற்கு நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் கலந்தாலோசித்தால் தீர்வு கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு, விவகாரங்கள் இன்று சாதகமாக முடியும்.
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஒருவித சிரமம் ஏற்படலாம். இன்று ஒருவரை அதிகமாக நம்புவது தீங்கு விளைவிக்கும். இயந்திரம் அல்லது தொழில்நுட்ப வேலை தொடர்பான வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்

இன்று உங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்வதிலும், தகவல் தரும் புத்தகங்களைப் படிப்பதிலும் ஒரு இனிமையான நாள் கழியும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவார்கள். எந்த விஷயத்திலும் கவனமாக நடந்து கொள்வதால் சாதகமான பலன்களைப் பெற்றிட முடியும். மக்கள் மத்தியில் உங்கள் மிதான விமர்சனம் அதிகரிக்கும். சில நிதித் தடைகளை சந்திக்க வேண்டியது வரலாம், எனவே எதையும் செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள்.
மிதுனம்

சொத்து, வாகனம் வாங்கும் முயற்சியில் சாதக நிலை ஏற்படும். சில ஆன்மிக அல்லது சமூக நடவடிக்கைகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். வருமான ஆதாரம் சிறப்பாக இருக்கும். ஆனால் செலவுகளும் அதிகரிக்கும்.
எந்த ஒரு புதிய வேலையையும் யோசிக்காமல் தொடங்காதீர்கள். வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே சில குடும்ப பிரச்சனைகள் காரணமாக தகராறு ஏற்படலாம்.
கடகம்

சுயமரியாதையும், செயலில் வீரியமாகவும், வேகமாகவும் செயல்படுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான ஒரு முக்கியமான பணி முடிந்தது நினைத்து நிம்மதியாகவும் உணர முடியும்.
சில விஷயங்கள் குறித்து மிகவும் பிடிவாதமாக நடந்து கொள்வதால் முக்கியமான வெற்றியை உங்கள் கைகளில் இருந்து நழுவ நேரிடும். எனவே உங்கள் நடைமுறையில் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ளவும். தொழில் மற்றும் வாழ்வாதாரத்தில் போட்டியை சந்திக்க நேரிடலாம்.
சிம்மம்

ராசிக்கு இன்று நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். அதீத அலட்சியத்தின் காரணமாக எந்த ஒரு முறையற்ற வேலையும் செய்யாதீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக, ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
இளைஞர்கள் தங்கள் தொழில் போட்டியில் வெற்றிபெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். வேலை சம்பந்தமான விஷயங்களில் சாதகமான சில மாற்றங்கள் கிடைக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.
கன்னி

உங்கள் அறிவியல் அணுகுமுறையும், மேம்பட்ட சிந்தனையும் உங்களை முன்னேற உதவும். உங்கள் ஆளுமையால் மற்றவர்கள் பாதிக்கப்படலாம். உங்கள் வேலையில் சாதகமான மாற்றங்களைக் காணலாம்.
இன்று நீங்கள் குறைந்த உற்சாகம் மற்றும் சோம்பலாக உணர்வீர்கள். அதனால் உங்கள் வேலையை சரியான திட்டமிடலுடன் தொடங்கவும். பண வருவாய் சிறப்பாக இருக்கும். ஆனால் தவறான செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். இன்று புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.
துலாம்

இன்று கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக நடக்க வேண்டிய நாள். குடும்பத்தில் சற்று சஞ்சலம் இருக்கும். வீட்டிலேயே பிரச்னையை தீர்க்க முயலவும். பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
இந்த நேரத்தில் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கவும். கடன் வாங்கிய பணத்தை திரும்பப் பெற நேரம் சரியில்லை. பணியிடத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
விருச்சிகம்

உங்கள் நேர்மறையான அணுகுமுறையால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பீர்கள். குழந்தைகளைப் பற்றியும், பிள்ளைகள் வகையிலும் நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று மற்றவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்வதற்கு முன் நன்கு யோசித்து நீங்களே முடிவு செய்யவும். உங்கள் சொந்த திறனை நம்புங்கள்.
இன்று தவறான விஷயங்களில் பணத்தை செலவழிப்பதன் மூலம் இழப்பு ஏற்படும் என்பதால், முதலீட்டில் கவனம் வேண்டும். சிறப்பாக வேலையை முடிக்க திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
தனுசு

இன்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டிய நாள். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களை மதித்து நடக்கவும். படிப்பிலும் தொழிலிலும் முழு கவனம் செலுத்துவீர்கள். நிதி விஷயங்களில் அதிக கவனம் தேவை. சமூக பணிகளில் நல்ல மதிப்பு இருக்கும் என்றாலும், கவனமாக இருக்கவும். இன்று சில ஒருவித அவதூறு எற்பட வாய்ப்புள்ளது.
உங்களின் பணி சார்ந்த துறையில் முன்னேற்றம் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொள்வார்கள்.
மகரம்

சில காலமாக தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பலவகையில் வெற்றிகள் கிடைக்கும் என்பதால் என்று உங்கள் முயற்சி அதிகரிக்கும். உங்கள் திறமையை நிரூபிக்கச் சிறப்பான நாளாக அமையும்.
இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அதீத வைராக்கியத்தை கைவிடுவது அவசியம். மாணவர்கள் நல்ல மதிப்பெண், படிப்பில் சிறக்க திட்டமிட்டு கவனமாக படிப்பது அவசியம். தொழில், வியாபாரம் சிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல இணக்கம் இருக்கும்.
கும்பம்
இன்று எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை இருக்கும். சமூகத்திலும் மற்றும் குடும்பத்திலும் உங்கள் கௌரவம் கூடும்.
மாணவர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்க நேரிடும். கவனம் தேவை புதிய முதலீடு செய்வதற்கு முன் உங்கள் தகுந்த ஆலோசனை மேற்கொள்வது அவசியம். குடும்பத்தில் பரஸ்பர நல்லிணக்கத்தைப் பேண முடியும்.
மீனம்

குழந்தையின் கல்வி அல்லது தொழில் சம்பந்தமாக ஒரு முக்கிய முடிவை எடுக்க நேரிடும். பரம்பரை சொத்து அல்லது பணம் தொடர்பான விஷயங்களில் இருக்கும் பிரச்னையை தீர்க்க சரியான நாள். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் உறுதுணையாக இருப்பீர்கள்.
எந்தவொரு கெட்ட பழக்கம் அல்லது எதிர்மறையான சிந்தனை, செயல்பாடுகளிலிருந்து விலகி இருங்கள். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை கவனமாக பரிசீலித்த தீர்ப்பது நல்லது.
Discussion about this post