இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 16, 2023, சோபகிருது வருடம் ஆடி 31 புதன் கிழமை. சந்திரன் கடகம், சிம்ம ராசியில் ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். ஆடி அமாவாசை திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள்.

ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்ய எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. உங்களுக்கு விலை உயர்ந்த நாளாக இருக்கும். இன்று உங்கள் வீட்டுச் செலவுகள் திடீரென அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம். மேஷ ராசியினர் உடல் ஆரோக்கிய விஷயத்தில் மருத்துவ ஆலோசனை பெறவும்.
ரிஷபம் ராசி பலன்

உங்கள் குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மனம் லேசாகும். இன்று பெற்றோரின் ஆசி கிடைக்கும்.
வியாபாரத்தில் சிறிய லாபத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும், வெளிநாடு, வெளியூரிலிருந்து உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க மூத்தவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும்.
மிதுனம் ராசி பலன்

உங்கள் தொழில் ரீதியாக இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று, உத்தியோகத்தில் மூத்தவர்களில் ஆதரவு கிடைக்கும். உங்கள் கடின உழைப்பால், நீங்கள் மாலைக்குள் முக்கிய விஷயஙக்ளை செய்து முடிக்க முடியும். இதன் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் அதிகாரிகளிடமிருந்து. இன்று நீங்கள் ஒரு புதிய வேலையில் சேர, வியாபாரம் தொடங்க சாதகமான பயனுள்ளதாக இருக்கும்.
கடகம் ராசி பலன்

இன்றைய நாள் ஆன்மீகப் பணிகளில் செலவிடுவீர்கள். ஏழைகளின் சேவையிலோ அல்லது தொண்டு செய்வதில் விருப்பமாக செயல்படுவீர்கள். உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களும் இன்று நீங்கும். இதன் காரணமாக நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள். இன்று உங்கள் குழந்தையின் கல்வி தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் ஒருவரின் திருமணத்தைப் பற்றி பேசுவீர்கள். இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.
சிம்ம ராசி பலன்

இன்று உங்களின் உடல்நிலை சுமாராக இருக்கும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்களின் வியாபாரம் தொழிலில் தடைப்பட்ட பணம் வந்து சேரும். தொழிலில் இருக்கக்கூடிய மந்த நிலை நீங்கும்.எந்த ஒரு புதிய திட்டங்கள் தொழிலை தொடங்கும் தகுந்த நபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தின் இலட்சியங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கிடைக்கும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று சுமாரான பலம் கிடைக்கும். இன்று உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட முடியும். உங்கள் எதிர்காலத் திட்டங்களை குறித்து விவாதிக்கலாம். கூட்டாக சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை வரும். யாரிடமும் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி நேயர்களுக்கு எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். தங்கள் தொழிலுக்காக வங்கி அல்லது நிறுவனங்களில் பெற நினைத்த கடன் தொகை கிடைக்கும். சில கடினமான வேலைகளில் சகோதரர்களுடன் கலந்த ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. திருமணம் குறித்த தடைகள் நீங்கும். மாணவர்கள் உயர்கல்விக்கான வழி அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையுடன் இனிமையான நேரத்தை கழிப்பீர்கள். என்று உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு இன்று சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களின் தாயார் உடல் நிலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வீடு மனை வாங்கும் கனவு நிறைவேறும். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது கடினமான நேரங்களில் பின் வாங்க மாட்டீர்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணியின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகர ராசி பலன்

மகர ராசி நேயர்கள் இன்று சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் செய்ய சரியான திட்டத்துடன் தயாராக இருப்பீர்கள். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலைகளை இன்று முடிக்க சாதகமான காலமாக இருக்கும். இந்த சட்டம் தொடர்பான வேலைகளை செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் ஒருவருடன் வாக்குவாதம் மனவருத்தம் ஏற்படலாம். அதனால் உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
கும்ப ராசி பலன்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இந்த சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் சாதக நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. என்று எந்த ஒரு ஆவணங்களிலும் சரியாக படித்து பார்த்து கையெழுத்திடவும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க முடியும். உங்களின் இனிமையான பேச்சால் மரியாதை அதிகரிக்கும்.
மீன ராசி பலன்

மீன ராசி நேயர்களுக்கு இன்று ஆளுமை மேம்படும். உங்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு நண்பர்கள் உறவினர்களின் நல்லாதரவு கிடைக்கும். எதிர்காலம் குறித்த திட்டங்கள் தீட்டுவீர்கள். என்று பெரிய வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் நேரத்தை விரயம் ஆக்காமல் செயலில் ஈடுபடவும். நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த வேலைகளை செய்து முடிக்க முடியும். வேலை சம்பந்தமான நல்ல செய்திகள் கிடைக்கும்
Discussion about this post