Friday, April 11, 2025

இன்றைய ராசிபலன்கள் 16-07-2023

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

மேஷ ராசியினரின் கனவுகள் எதுவாக இருந்தாலும், இன்று அவை நிறைவேறுவதைக் காண்பீர்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இன்று நீங்கள் வேலையில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நாள்.

உங்கள் வேலைகள் பாதிக்கப்படலாம். இன்று நீங்கள் உங்கள் உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் தகராறு தீரும்.

ரிஷபம் 

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்தால், இன்று அதில் நஷ்டம் வரலாம். இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த புதிய சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்.

நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினருடன் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று, கடின உழைப்புக்குப் பிறகு, உங்களுக்கு வர வேண்டிய பணத்தைப் திரும்ப கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இன்று மாலை உங்கள் பெற்றோரின் சேவையில் செலவிடுவீர்கள்.

மிதுனம் –

மிதுனம்  இன்றைய ராசி பலன் - Gemini

இன்று உங்களில் வேலைகளை செய்து முடிக்க புதிய ஆற்றல் புகுத்தப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க தயாராக இருப்பீர்கள். சமூக காரணங்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும், எந்த விஷயத்திலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய கடன் பணம் திரும்ப கிடைக்கும். கொஞ்சம் பணத்தையும் அதிகம் செலவழிக்க நேரிடும்.

கடகம்

கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் தரும் நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.

வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிய அளவிலான இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நன்மையே விழையும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் இன்று நன்மையில் முடியும். உத்தியோகத்திற்காக கணவன்-மனைவி பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேரும். அதற்கான வழிவகைகள் என்று உண்டாகும்.

சிம்மம்

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

அன்பர்களுக்கு இன்றைய நான் மிகச்சிறந்த பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் அதை தவிர்க்கவும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் கோவிலுக்குச் செல்லுதல் மூத்தவர்கள் ஆசீர்வாதம் பெறுதல் போன்றவை நன்றாக நடக்கும் .

கன்னி

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

கடன் பிரச்சினைகள் மனதை அலைக்கழித்தாலும் அனைத்தும் கட்டுக்குள் நிற்கும் மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உள்ளது.

ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றங்கள் ஏற்பதற்கு வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம்

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாள் ஆகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள் கடன் பிரச்சனைகள் ஒரு தீர்வுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

விருச்சிகம் விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

நேயர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை.

வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கோவிலுக்குச் செல்வது அல்லது வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல தகவல்கள் கிடைப்பது போன்றவை உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனமகிழ்ச்சி கொண்டு சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு

வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் குறையும்

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

கணவன் மனைவி ஒற்றுமை அந்நியோன்யமாக இருக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள் புதிய ஆர்டர்கள் கிடைத்து பணத் தேவைகள் அதிகரிக்கும்.

வேலைகளை திறம்பட சமாளித்து நன்றாக முன்னேற்றத்திற்கு தொழிலைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உத்தியோக உயர்வுகள் போன்றவை கிடைக்க வாய்ப்புண்டு.

மீனம்

மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்க்கும் பல காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் அமைதி தவழும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும். பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல வேலைகளை முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள்.