இன்றைய ராசிபலன் செப்டம்பர் 14, 2023, சோபகிருது வருடம் ஆவணி 29 வெள்ளிக்கிழமை. சந்திரன் சிம்மம், கன்னி ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அமாவாசை, பிரதமை திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். கும்ப ராசி சதயத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மனநிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பதிவு உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் றும் நிறைவேறும்.
அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பிறந்த வீட்டால் நன்மைகள் ஏற்படும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் ஏற்படலாம். அதனால் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை இன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குதூகலமான நாளாக இருக்கும். என்று புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சில முக்கிய திருப்புங்கள் ஏற்படும்.
இன்று பைரவர் வழிபாடு செய்வதால் மறைமுக எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். தன லாபம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இன்று லட்சுமி நாராயணன் வழிபாடு கடன் பிரச்சினைகளை தீர்க்க உதவும். நண்பர்களின் உதவி மனதிற்கு ஆறுதலைத் தரும். இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேற கூடிய நாளாக அமையும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன், சூரியனுடன் சேர்ந்து இருப்பது மனநிறைவையும், நன்மையும் தரக்கூடிய நாளாக இருக்கும். மக்களாக நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவி உங்கள் கைக்கு வந்து சேரும். இன்று நண்பர்களின் உதவி கிடைக்கும். இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் மாற்றுவது வாங்குவது குறித்த முயற்சிகள் வெற்றி பெறும். இன்று காலை வேளையில் உத்தியோகத்திலும் குழப்பமான சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மன நிறைவைத் தரும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளால் சில குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். பல மாதங்களாக நினைத்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடந்து, மனதிற்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் குறித்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடன் பிரச்சனை தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டுபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
பெற்றோர்களின் ஆரோக்கியத்திலும் சிறு பிரச்சனைகள் வந்து செல்லலாம். இன்று மன ஆறுதலும், மனக்குழப்பங்களும் தீர உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கு, விசாரணைகளில் மனம் சற்று சஞ்சலம் ஏற்படக்கூடும்.
இன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய நாளாக இருக்கும். மனதில் இருக்கக்கூடிய குறைகள் தீர நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க கூடிய நாளாக இருக்கும். பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த வேலைகளும் நிறைவடையும். கடன் தொல்லை தீரும். 12ஆம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் பகவானால் கொடுக்கல் வாங்கலில் மனக்கவலை ஏற்படலாம்.
பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப விவகாரங்களால் கணவன் மனைவியே சிறு சிறு சண்டைகள் வந்து செல்லும். இன்று தன லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு விட்டுப் போன மற்றும் எதிர்பார்த்து ஏமாந்து போன விஷயங்கள் நிறைவேறி மகிழ்ச்சியை தரும். இன்று நாள் முழுவதும் மனதில் இருக்கக்கூடிய குறைகள் தீரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இன்று தைரியம் அதிகரிக்க பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும். நவகிரக வழிபாடும் நன்மை தரும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று முழுவதும் மனதிற்கு அமைதியும், ஆறுதலும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளும் தீரும்.
இன்று விநாயகர் வழிபாடு செய்ய சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு நிறைவை தரக்கூடிய நாளாக இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் இருக்கக்கூடிய சண்டை, சச்சரவுகள் நீங்கி, மேலதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கைக்கு வந்து சேரும். அது மனதிற்கு ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும். விட்டுப் பிரிந்து சென்ற சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளது.குழந்தைகள், கணவன், மனைவி ஒற்றுமை ஏற்படும். என்று குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. பேசாமல் இருந்த உறவினர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் மன அமைதி கிடைக்கும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மனக்குறைகள் தீரும்.. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சென்றாலும், குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்க கூடிய நாளாகவே இருக்கும். குழந்தைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் தீரும். இன்று சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மன ஆறுதலை தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில், வியாபாரிகளுக்கு பண விஷயத்தில் லாபம் தரக்கூடிய நாளாகவே இருக்கும்.
பைரவர் வழிபாடு செய்ய எதிலும் வெற்றி கிடைக்கும்.
Discussion about this post