இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 15, 2023, சோபகிருது வருடம் ஆடி 30 செவ்வாய் கிழமை. சந்திரன் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சதுர்த்தசி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள்.

அன்றைய தினம் உங்களின் எதிர்காலம் குறித்து சிறிது கவலை கொள்வீர்கள். பணியிடத்தில் சில தவறுகள் நேரிடலாம், அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். யாரிடமாவது ஆலோசனை பெற்று கவலைகளை தீர்க்கலாம். உங்கள் பெற்றோருடன் சில முக்கிய விஷயங்களை விவாதிப்பீர்கள். உங்கள் சகோதரர்களின் ஆலோசனை உதவும். குடும்பத்தில் திருமணம் பற்றி நல்ல செய்தி கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் உறவை வலுப்படும். உங்கள் வியாபாரத்தில் ஒருவருடன் பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. இன்று மாலையில், உங்களுக்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடியும்.
மிதுனம் ராசி பலன்

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். உங்கள் எதிரிகள் கூட உங்கள் நண்பர்களாகவே பார்க்கப்படுவார்கள். உங்கள் எதிரிகளை சமாளிக்க முடியும். நண்பர்களாகவும் இருக்கலாம். குடும்பத்தில் ஏதேனும் ஒரு சுப நிகழ்ச்சிகள் செய்ய முயல்வீர்கள். கடினமாக உழைப்பு சாதகமாகும்.
கடகம் ராசி பலன்

இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் சில உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிக்கான திட்டமிடுவீர்கள். தனியார் வேலைகளில் உள்ளவர்கள் மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அதிகம் பேசுபவர்களிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும். உங்களின் செயல்பாட்டால் அதிகாரிகளின் கோபத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும், நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணம் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம் ராசி பலன்

இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். கல்விக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு இன்று சில நல்ல வாய்ப்புகள் வரலாம்.இதன் காரணமாக கல்வியில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். உங்கள் தந்தைக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
நீங்கள் உங்கள் வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்ய நினைப்பீர்கள், அது எதிர்காலத்தில் நிச்சயமாக வெற்றி தரும்.
கன்னி ராசி பலன்

மற்ற நாட்களை விட இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று வணிகத்தில் நாள் முழுவதும் லாப வாய்ப்புகள் கிடைக்கும், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் மற்றும் உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும்.
இன்று நீங்கள் குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண உறவில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்

அரசியலில் இருப்பவர்களுக்கு சாதக நாள். தங்கள் வேலையில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள், அரசாங்க வேலைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேசவும், செயல்படவும்.
உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான சாதக சூழல் இருக்கும். உங்கள் பணியிடத்தில் சில எதிரிகளை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்

இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். கசப்பை இனிப்பாக மாற்றும் கலையை இன்று நீங்கள் கற்றுக் கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் தொழிலில் அதிக லாபம் ஈட்ட முடியும். உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ சில சிக்கல்களை தீர்க்க தீவிரமாக செயல்படுவீர்கள். வேலை சற்று இழுபறியாக இருக்கும். பணத்தை முதலீட்டு செய்வதற்கும் உன் சரியான ஆலோசனை தேவை.
தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு பெற்றோரிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். இதன் காரணமாக உங்கள் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று, குடும்ப உறுப்பினரின் திருமணம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்பீர்கள். சிலருடன் கூட்டு சேர்ந்து செய்யக்கூடிய வியாபாரத்தில் நிறைய லாபத்தை பெற முடியும். இன்று மாலை உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும்.
மகரம் ராசி பலன்

சமூகக் கண்ணோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உங்களின் பணி பாராட்டப்படும். சில புதிய பொறுப்புகள், வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வியாபாரத்தில் சில எதிரிகள் உங்களை ஏமாற்றக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இன்று மாலையில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உங்கள் தொழிலில் கிடைக்கும். லாம் சற்று குறையும்.
கும்பம் ராசி பலன்

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் உறவு சிறக்கும். உங்கள் மனநலப் பிரச்சனைகள் குறையும். வேலை தேடுபவர்களுக்கு இன்று புதிய வாய்ப்பு கிடைக்கும், இது அவர்களின் நிதி நிலைமையை பலப்படுத்தும்.
மீனம் ராசி பலன்

இன்று உங்களுக்கு மதிப்புமிக்க ஒன்றைப் பெறுவதற்கான நாளாக இருக்கும். இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்தாலும், உங்களின் கடின உழைப்பாலும், நீங்கள் நீண்ட நாட்களாக விரும்பி வந்த மதிப்புமிக்க ஒன்றைப் பெறுவீர்கள். புதிய தொழில், வியாபாரம் செய்ய யோசிப்பீர்கள். குடும்பத்தில், பணியிடத்தில் இருக்கும் மன வருத்தம் நீங்கும். அரசு துறையில் நன்மைகள் கிடைக்கும்.
Discussion about this post