மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். சமூகத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும். இன்று குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாட்டால் மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை, பொருள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் நன்றாகவே இருக்கும். வணிகர்களுக்கு, இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று புதிய திட்டங்களில் கவனம் செலுத்துவார்கள். உங்களுக்கு மன அமைதியைத் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். இன்று உங்கள் அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
சட்டம் சார்ந்த விஷயங்களில் இன்று வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உள்ள தடைகள் நீங்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். மாலைக்குள், நீங்கள் குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள், இதன் காரணமாக உங்கள் தைரியமும் அதிகரிக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பதில் அதிக நேரம் செலவிடுவார்கள். உங்களின் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேற்ற முடியும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் விரும்பும் வேலையைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலான வேலைகளில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்பிற்கு சிறப்பான பலன் கிடைக்கும்.
கடக ராசி

இன்று, கடக ராசிக்காரர்களின் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் யோசனைகள் எடுபடும். உங்கள் எதிரிகளை இன்று சிறப்பாக சமாளிப்பீர்கள். இன்று நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதன் பலன் எதிர்காலத்தில் சிறப்பாக கிடைக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பணிகளை முடிக்க புதிய யோசனைகளை செய்வீர்கள். சோம்பலைக் கைவிட்டு வேகமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். மாலை நேரத்தை நண்பர்களுடன் உல்லாசமாகக் கழிப்பீர்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருப்பார்கள். இன்று அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும்.
உங்கள் கடினமான விஷயங்களை கையாள வேண்டியது இருப்பதால் சோர்வாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் மனைவியின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் பணியில் தடைகளை உருவாக்க முயல்வார்கள்.
மற்றவர்களிடம் அதிகம் சண்டையிடும் மற்றும் வாதிடும் 5 ராசிகள் யார் தெரியுமா?
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். குடும்ப உறவினர்களுடன் உறவு மேம்படும்.
கடன் கொடுத்தல், வாங்குதல் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும். முடிந்தால் தவிர்க்கவும். நடத்தையில் நிதானமும் எச்சரிக்கையும் தேவைப்படும் நாள். உங்கள் வேலையில் புதிய உயரத்தை தொட முடியும். புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
தங்கம் வாங்குவது போல கனவு வருதா? அப்போ நீங்க அதிர்ஷ்டசாலி தான், தங்க புதையல் என்ன பலன் தரும் தெரியுமா?
துலாம்

துலாம் ராசிக்காரர்களின் வேலையில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய திட்டமிடலுடன் செயலடவும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் செயல்பாடுகளைக் கண்டு இன்று மனதில் ஒரு திருப்தி ஏற்படும். உங்கள் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் நிதி நிலைமையைப் பற்றி குறைவாக கவலைப்படுவீர்கள், ஏனென்றால் நீங்கள் நீண்ட காலமாக மற்றவர்களிடம் சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம்.
குடும்ப உறுப்பினர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவீர்கள்.
வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்கும். உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உங்கள் செயல்பாடுகளின் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள்.
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய வேலைகளில் செய்யும் முயற்சிக்கு நல்ல பலன் அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று தங்கள் நடத்தை மற்றும் பேச்சு இரண்டிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்

கூட்டுத் தொழிலில் ஈடுபடக்கூடிய மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். இன்று, பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியது இருக்கும். அன்றாட வீட்டு வேலைகளை செய்து முடிக்க பொன்னான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். வேலைப்பளுவால் உடல் நலம் பாதிக்கப்படலாம். வியாபாரிகளுக்கு இன்று நல்ல நாள். லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் இருக்கும். எனவே அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். ஒவ்வொரு வேலையிலும் கவனமாக செயல்படுவதும், முடிவையும் எடுங்கள். குழந்தையின் திருமணத்தில் இருந்து வந்த தடை நீங்கும்.
மீனம்

இன்று மீன ராசிக்காரர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் அமையும். இன்று நீங்கள் வியாபாரத்தில் சரியாக திட்டமிட்டு ரிஸ்க் எடுக்கவும். ஏனெனில் அது எதிர்காலத்தில் உங்களுக்கு மகத்தான பலன்களைத் தரும். உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாடு பல வகையில் லாபத்தை தரும். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் குடும்ப பிரச்னைகள் தீரும். சகோதரர்களுடனான உறவுகள் மேம்படும்.
Discussion about this post