மேஷ ராசி பலன்

மேஷ ராசிக்காரர்கள் இன்று உறவினர்களிடமிருந்து அனுகூலங்களும் ஆதரவும் கிடைக்கும். தங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்பால் கடின சூழ்நிலையைச் சாதகமாக்கி வெற்றி பெறுவார்கள். இன்று நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் நன்மையைத் தரும்.
இன்று பணிபுரியும் இடத்தில், அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணவும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தவும். இல்லையெனில் மற்றவர்களிடம் அதிருப்தியைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள் மூலம் அனுகூலமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருங்கள்.
ரிஷபம்

இன்று கிரகங்களின் நிலை உங்களுக்கு எல்லா வகையிலும் சுப பலன் தருவதாக இருக்கிறது. இன்று முதலீட்டில் லாபம் கிடைக்கும். அரசுத் துறை தொடர்பான எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் லாபகரமான சூழ்நிலை இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும், உங்களின் சில நடத்தைகளால் நெருங்கிய உறவினர்களைப் பாதிக்கும். வரவுக்கான சாதகமாக இருக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். உடல் நல பிரச்னைக்கான சிகிச்சைக்காகச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இன்று வெளி உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்

இன்று, மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் விரிசல் குறையும். நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
கவனமாக சிந்தித்த பிறகே எந்த முடிவையும் எடுங்கள். சிலரின் வார்த்தைகளை நம்பி ஏமாற வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் இன்று பணப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.
கடக ராசி பலன்

இன்று, வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் திருப்தி அடைவார்கள். உங்களின் சம்பளம் கூட வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் திட்டமிட்ட சில வேலைகளில் ஏமாற்றம் ஏற்படலாம்.
செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வேலை தடைப்பட வாய்ப்புள்ளது. இன்று, வணிகத்தில் ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதனால் உங்கள் மனம் அமைதியற்றதாக இருக்கும். ஆனால் பண ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்கும், இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும்.
சிம்ம ராசி பலன்

இன்று நீங்கள் எந்த முடிவையும் எடுக்கும் போது, பொறுமையுடனும் நிதானத்துடனும் எடுக்க வேண்டிய நாள். அது எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பெற்றோருடன் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
பிரச்னைகளை நிதானமாக தீர்க்க முயலவும். இன்று உங்கள் குடும்பச் சூழலும் குழப்பமாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் எந்த ஆபத்தான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். நீங்கள் ரிஸ்க் எடுத்தால், அது உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்கு இன்று அரசாங்க உதவியைப் பெறலாம். அரசு தொடர்பான வேலைகள் வேகமாக முடியும். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். சில புதிய நண்பர்களை உருவாக்க முடியும். இன்று உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நிதிச் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியால், இன்று உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பிள்ளையின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க உங்கள் பெற்றோரை ஆலோசிப்பீர்கள்.
துலாம் ராசி பலன்

இன்று, வியாபாரத்தில் சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் இன்று உங்கள் இயல்பு ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கும். சுயமாக யோசித்து செயல்படவும். யாரிடமும் ஆலோசிக்க வேண்டாம். இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.
அன்புக்குரியவர்களின் உதவியால் சகோதர சகோதரிகளின் திருமணத்தில் இருந்த தடை இன்று நீங்கும். இன்று மாலை உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக செலவிடுவீர்கள். நீங்கள் நீண்ட காலமாக ஒரு சொத்து வாங்க முயன்றிருந்தால் அது சாதகமாக கிடைக்கும்.
விருச்சிகம் ராசிபலன்

இன்று நீங்கள் எந்த வேலை செய்தாலும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். இன்று உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சிறு பிள்ளைகள் சில கோரிக்கைகளை வைக்கலாம்.
இன்று உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்ய வேண்டும். சில நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைத்து உங்கள் மனதில் உற்சாகப் படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் அதிகாரிகளின் நல்ல உறவைப் பெறுவீர்கள்.
தனுசு ராசிபலன்

இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வேலை செய்யும் இடத்தில், இன்று உங்கள் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் நீண்ட காலமாக வணிகத்தில் சிக்கியிருந்த பணம் உங்கள் கைக்கு வர வாய்ப்புள்ளது.
உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். இன்று நீங்கள் புதிய வாகனம் வாங்க ஏற்ற நாள். கடினமாக உழைத்தால்தான் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். இன்று மாலையில் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
மகர ராசி பலன்

இன்றைய நாள் உங்கள் மரியாதையை அதிகரிக்கும், உங்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றும். எல்லா வேலைகளும் வெற்றிகரமாக முடிக்க முடியும். இன்று எதிரிகளை சமாளித்து எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
இன்று நீங்கள் ஒரு சமூக விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒரு செல்வாக்கு மிக்க நபரின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும். காதல் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும்.
கும்பம் ராசிபலன்

ஆரோக்கிய பிரச்னைகளை கவனத்தோடு மருத்துவரை அணுகவும். இன்று நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க நினைத்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால், கடன் கொடுத்தல், வாங்குதலை முற்றிலும் தவிர்க்கவும். உங்கள் வணிகத்திற்காக முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்கள் வேலையில் லாபம் மற்றும் நஷ்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கான நாள். இன்று அக்கம்பக்கத்தில் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டால் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
மீனம் ராசிபலன்

உங்கள் பிள்ளையின் கல்வியில் உள்ள தடையை நீக்கும். உங்களுக்கு நிச்சயமாக நன்மை பயக்கும். இன்று வெளிநாடு, வெளியூர் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். இன்று மாமியார் தரப்பிலும் பணப் பலன்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் உலக இன்பங்கள், வசதிகள் கிடைப்பதற்கான நாள். மாணவர்கள் போட்டியில் வெற்றி கிடைக்கும். இன்று மாலை நேரத்தை உங்கள் அன்புக்குரியவருடன் மகிழ்ச்சியாகச் செலவிடுவீர்கள்
Discussion about this post