Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய ராசிபலன்கள் 13-11-2023

November 13, 2023
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்றைய  பஞ்சாங்கம்

13-11-2023, ஐப்பசி 27, திங்கட்கிழமை, அமாவாசை திதி பகல் 02.57 வரை பின்பு வளர்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 03.22 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பின்இரவு 03.22 வரை பின்பு சித்தயோகம். சர்வ அமாவாசை. கேதார கௌரி விரதம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் –  13.11.2023

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சியில் வெற்றி கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளி இடங்களில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

தனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். இதுவரை இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் பொறுமையும் செயலில் நிதானத்தையும் கடைபிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

Tags: #Astrology#Horoscope#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 12-11-2023

Next Post

ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்தவர் மர்ம மரணம்

Next Post
பேராதனை பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்தவர் மர்ம மரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.