மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று சில வேலைகளை முடிக்க பயணம் செல்ல வேண்டியது இருக்கும். அதில் நீங்கள் வெற்றியும், அனுகூலமும் பெறுவீர்கள். இன்று உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த எந்த ஒரு வேலையும், மாலையில் முடித்துவிடலாம், அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று குடும்பத்துடன் எங்காவது செல்ல திட்டமிடுவீர்கள். பணியிடத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும். வணிகத்தில் புதிய ஒப்பந்தம் கிடைத்து மகிழ்வீர்கள். இருப்பினும் ஒப்பந்தங்களை சரியாக படித்துப் பார்ப்பதும், அதில் உள்ள சிக்கல்களை உணர்வதும் அவசியம். நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டும். நண்பர்களுடன் உல்லாசப் பயணங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலை, தொழிலில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் முன் சரியான திட்டமிடல் தேவை. கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். இன்று கடன் அடைக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாலினத்தவரிடம் மன கசப்பு ஏற்படலாம். எதைப் பேசும் முன் கவனம் தேவை.
கடகம்

இன்று கடகம் ராசிக்காரர்களின் வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மிகம் மற்றும் சமயப் பணிகளில் நேரத்தைச் செலவழித்து மனம் அமைதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
இன்று நீங்கள் கடின உழைப்பால் அதிக பணம் பெறலாம். மாலையில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். தூரத்து உறவினருடன் உறவில் நெருக்கம் ஏற்படலாம். இன்றைக்கு வருவாயுடன் செலவுகளும் இருக்கும்.
சிம்மம்

உங்களுடைய கடின முயற்சிக்கு என்று பாராட்டுரைகள் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் பெறக்கூடிய நிலைகள் உண்டாகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.
கன்னி

உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான காரியங்களை இன்று துவக்க வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவியிடையே பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் குடும்ப அமைதி நன்றாக இருக்கும்.
திருமணம் தொடர்பான சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் ஆதாயத்தை பெறுவீர்கள் என்றாலும் கடன் பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும். இவற்றை திறம்படச் சமாளிப்பீர்கள்.
துலாம்

இன்று முழுவதும் சுபமான நாளாக இருக்கும். இன்று கல்வி மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவார்கள். குடும்பம் மற்றும் காதல் உறவு விஷயத்தில், நிதானம் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் சச்சரவுகள் ஏற்படலாம்.
ஃபேஷன் மற்றும் அழகுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். அரசுத் துறை தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும், முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
விருச்சிகம்

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். அது தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம் ஒரு சிலருக்கு இடமாற்றம் பற்றிய சிந்தனை கள் அதிகமாக ஏற்படும். இவற்றில் வெற்றி காண்பீர்கள்.
வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் வருமானத்தையும் கூடுதலாகவே கொடுத்துவிடும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.
தனுசு

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு பலருக்கு உருவாகும். வெளிநாட்டுப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.
கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையைப் பெறுவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.
மகரம்

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை. நன்றாக இருக்கும் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பற்றாக்குறை சிறிதளவு இருக்கும் என்றாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
கும்பம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஆன நிலையை அடைவார்கள். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும்.
தனவரவு உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மீனம்

குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும்.
பணிச்சுமை அதிகமாக பெறுவார்கள். இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றியடைவீர்கள்.
ஆராய்ச்சிக் கல்வியில் உள்ளவர்களுக்கு பல புதிய முடிவுகளை எட்ட வாய்ப்பு உண்டு. உடல் நலன் சீராக இருந்துவரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். சட்டென உணர்ச்சிவசப்படக்கூடிய நிகழ்வுகள் ஏற்படலாம் என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. புதிய தொழில் முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும்.
Discussion about this post