இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2023, சோபகிருது வருடம் ஆவணி 25 திங்கட் கிழமை. சந்திரன் கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். துவாதசி திதி நடக்கக்கூடிய இன்று சித்த யோகம் உள்ள நாள். தனுசு ராசிக்கு மூலம், பூராடம் சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்பை நோக்கி செயல்படுபவர்களுக்கு இன்று சில நல தகவல்கள் கிடைக்கும். இது மனமகிழ்ச்சியை அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல லாபத்தை அடைய முடியும்.முதலீடு கூட நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இன்றைய சில பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்கள் தந்தையின் ஆலோசனை பலவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் எடுக்கக்கூடிய ஆபத்தான முன்னெடுப்புகள் விஷயங்களில் கவனமாக இருக்கவும். ஆபத்தைத் தவிர்க்கவும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் ஆதரவு, உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் படிப்பு சார்ந்த விஷயங்களில் நல்ல ஆலோசனை கிடைக்கும். பெற்றோருடன் சில முக்கிய பிரச்சனைகள் குறித்து வாதிப்பீர்கள்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சில மாற்றங்களை காண்பீர்கள். மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் உங்களுக்கு நன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். கொடுத்த கடன் பணத்தை திரும்ப பெறுவது கடினம் என்பதால் சிந்தித்துச் செயல்படுவோம். இன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனால் உங்களின் பேச்சில் இனிமை தேவை. உறவில் முரண்பாடுகள் உருவாகலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அதனால் சற்று மனக்கவலை ஏற்படும். வேலை சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல்படவும். பணியிடத்தில் சிலவருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனால் அமைதி காக்கவும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாலை நேரத்தில் குடும்பத்துடனும், பெற்றோருடனும் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் எந்த ஒரு செயல்பாடுகளிலும் பெற்றோரின் ஆசி முழுவதுமாக இருக்கும். உங்களுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. உங்களின் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை கேட்கலாம். உங்களின் ஆரோக்கியம் சற்று மோசமடைய வாய்ப்புள்ளது கவனமாக இருக்கவும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க சரியான திட்டமிடல் தேவை. வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களின் உறவினர்களின் நல்லாதரவு கிடைக்கும். வீட்டில் செழிப்பான சூழல் இருக்கும். இன்று கடினமான சூழ்நிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். உங்களின் கௌரவம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. மற்றவர்களின் ஆதரவு அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். உங்களின் பிள்ளைகளின் உடல் நிலை குறித்து சற்று கவலை ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள்.

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் வருவாயை மனதில் வைத்துக் கொண்டு செலவுகளை செய்வதும் உழைப்பதும் அவசியம். இன்று நிதிநிலை சற்று மோசமாக இருக்கக்கூடிய நாள். எதிர்காலம் குறித்து சரியாக திட்டமிட்டு செயல்படவும். திருமணம் ஆனவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புள்ளது.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படவும்.
உங்களின் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் பணியிடத்திலும் தொழில் சார்ந்த விஷயங்களிலும் எதிரிகளால் சில தடைகள் ஏற்படலாம். இதிலும் கவனமாக செயல்பட்டால் வெற்றிகள் உண்டு. விருந்து விழாக்கள் என கொஞ்சம் பணம் செலவழிய வாய்ப்புள்ளது. சிலரின் மூலம் நிதி நன்மைகளையும் பெறுவீர்கள். கூட்டுத்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுகமான நாளாக இருக்கும். திருமணம் முயற்சியில் இருந்த தடைகள் உங்கள் உறவினர்கள் மூலம் நீங்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள், விவாதங்கள் நடக்கும். இழந்த பொருளை மீட்பதற்கான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பாதை அமையும். இன்று உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக செலவழிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு எதிர்பார்க்க நல்ல பலன்கள் கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டு செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். நினைத்ததை விட அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு எதிர்காலம் குறித்த கவலைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பது போல் ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது. மனமகிழ்ச்சி உண்டாகக் கூடிய நாள். அரசு சார்ந்த விஷயங்களில் ஆட்சி அதிகாரத்தின் முழு பலனை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பரை சந்திக்க முடியும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் இருக்கும் சச்சரவுகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். மன அழுத்தம் குறையக்கூடிய வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பல வேலைகளை செய்து முடிக்க சாதகமாக இருக்கும். அதனால் உங்களின் டென்ஷன் குறையும். சிலருக்கு கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் கவனமாக இருக்கவும். பிள்ளைகள் விஷயங்கள் திருப்தி தருவதாக இருக்கும்.
Discussion about this post