மேஷம்

உங்கள் எதிர்மறையான பழக்கங்களில் ஏதேனும் ஒன்றை மாற்ற முயற்சி செய்வதால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வர வாய்ப்பு உண்டு. கெட்ட விஷயங்களை வலியுறுத்த வேண்டாம். அன்புக்குரியவர்களின் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு மனம் சோகமாக இருக்கும்.
மற்றவர்களின் விஷயங்களில் கவனம் செலுத்தாமல், உங்கள் திறமையை நம்புங்கள். நீங்கள் பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் மற்றும் இல்லற விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக விளங்குகிறீர்கள்.
ரிஷபம்

இன்று வீட்டைப் பராமரித்தல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். கடவுளின் அருளால் உங்கள் செயலில் வெற்றியைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இது சாதகமான நேரம்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடவோ அல்லது அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றவோ அனுமதிக்காதீர்கள். சில சமயங்களில் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். உங்களின் கடுமையான சொற்களால் ஒருவரின் மனம் புண்படலாம்.
மிதுனம்

நிலம் சம்பந்தமான வேளைகளில் உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். சமூக நடவடிக்கைகளில் உங்களின் அறிவுரைக்கு மதிப்பளிக்கப்படும்.
நாளின் இரண்டாம் பாதியில், கிரகங்களின் நிலை சற்று மாறலாம் மற்றும் நீங்கள் சங்கடப்படும் படி, சில நிகழ்வுகள் நடைபெறலாம். மற்றவர்களால் நீங்கள் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. குத்தகைதாரர் அல்லது நில உரிமையாளருக்கும் இடையே சில தகராறுகள் ஏற்படும்.
கடகம்

இன்றைய தினம் நல்ல தினம். அன்றாட வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரசியமான செயல்களில் நேரத்தை செலவிடுங்கள். ஏதோவொன்றைப் பற்றி ஏமாற்றம் ஏற்படலாம். இதனால், உங்கள் இலக்கிலிருந்து நீங்கள் சற்று விலகலாம்.
இந்த நேரத்தில் உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களை பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, உங்கள் மீது கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் செய்யப்படும் ஒரு சில மாற்றங்கள் நேர்மறையான முடிவுகள் வந்துசேரும்.
சிம்மம்

இன்று நீங்கள் நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத செல்வாக்கு மிக்க நபரின் ஆதரவைப் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்கவர்களைச் சந்திப்பதும், கருத்துப் பரிமாற்றம் செய்வதும் உங்களின் ஆளுமையை மேம்படுத்தும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் தவறான பலனைத் தரும். உங்கள் வேலையை புத்திசாலித்தனமாக செய்யுங்கள்.
உறவினர் அல்லது நெருங்கிய நண்பரைப் பற்றி நீங்கள் மோசமாக யோசிக்கலாம். இன்றைய நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லை. வியாபாரத்தில் புதிய நிறுவனங்களில் சேர வாய்ப்பு உண்டாகும்.
கன்னி

உங்களுக்கான சிறந்த நபருடனான தொடர்பை அதிகரிக்கவும். வாழ்க்கையில் செழிப்பு இருக்கும். குடும்பத்துடன் மதப் பயணம் செல்லும் சூழல்கள் உருவாகலாம். உங்கள் குறிக்கோளில் தீவிரமாகவும் பொறுமையாகவும் இருங்கள்.
மனதில் பல்வேறு வகையான சந்தேகங்கள் இருக்கலாம். எனவே, எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் பல போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இடையே உணர்வுபூர்வமான உறவு நன்றாக இருக்கும்.
துலாம்

நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீர்ந்து நிம்மதியும், ஆறுதலும் கிடைக்கும். அதே சமயம் நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் இன்று ஓரளவு சுயநலமாக காணப்படுவீர்கள். சிலர் உங்களை எதிர்ப்பார்கள், உங்களை பின்னால் விமர்சிக்கலாம். இந்த விஷயங்களைப் புறக்கணித்து, உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்

குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நாளின் பெரும்பகுதி செலவிடப்படும். இன்று மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவீர்கள். உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரும் சில வேலைகளை இன்று நீங்கள் செய்வீர்கள்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வெளியாட்கள் தலையிட அனுமதிக்காமல் இருப்பது நல்லது. சில தவறான முடிவுகளால், ஏமாற்றமடைவீர்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற எந்த விதமான ரிஸ்குகளையும் எடுக்க வேண்டாம்.
தனுசு

சொத்துக்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு சாதகமான நேரம். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் புரிதலுடன் முக்கியமான பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு நெருங்கிய நபரை சந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்.
எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்வீர்கள். நாளின் பிற்பாதியில் ஏதேனும் ஒரு கெட்ட செய்தியால் மனம் ஏமாற்றமடையும். மனதளவில் நீங்கள் சிறிது ஏமாற்றமடையலாம். எந்த சண்டையிலும் ஈடுபட வேண்டாம். உங்கள் பேச்சையும் மனதையும் கட்டுப்படுத்துங்கள்.
மகரம்

நீண்ட நாட்களாக உங்களை பின்தொடரும் பிரச்சனை எளிதில் தீரும். இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்களுக்கான தொடர்பு வட்டம் அதிகரிப்பதுடன், அதன் மூலம் நன்மையும் நடைபெறும். வேலை தேடுபவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
அனாவசிய செலவுகளை குறைக்க வேண்டும். இல்லையெனில், நிதி சிக்கல்கள் ஏற்படலாம். இளைஞர்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான வெற்றியை பெறுவார்கள்.
கும்பம்

வாழ்க்கையை நேர்மை யாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
நீங்கள் ஒரு சிறப்பான நபரை இன்று சந்திக்க நேரிடும். விரைவான வெற்றியைப் பெறவும், உங்கள் செயல்களின் பலனை காட்டவும் தவறான முறையைப் பயன்படுத்தாதீர்கள், இல்லையெனில் உங்கள் நற்பெயர் கெட்டுவிடும். உங்கள் கடின உழைப்பு வணிக நடவடிக்கைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும்.
மீனம் இ
நீண்ட நாட்களாக வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய கார் அல்லது வாகனம் வாங்கும் ஆசையும் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் சிறு பிழைகளால், உங்களின் நம்பிக்கை குறையலாம். அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையை பெறுவீர்கள். தவறான செயல்களைச் செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடன் வணிக அறிவைப் பெறுங்கள்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். இவை தொடர்பான வைத்தியங்களை ஆரம்பிக்கலாம்.
Discussion about this post