தேய்பிறை திரிதியை திதி இரவு 7:43 மணி வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 8:28 மணி வரை,
அதன் பின் மூலம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்
நல்ல நேரம்: காலை 6:00 – 7:30 மணி.
ராகு காலம்: காலை 7:30 – 9:00 மணி.
எமகண்டம்: காலை 10:30 – 12:00 மணி.
குளிகை: மதியம் 1:30 – 3:00 மணி.
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.
பொது: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதாரண நாளாக இருக்கும், இன்று உங்கள் பொருள் வசதிகளுக்காகச் செலவு அதிகரிக்கும். உங்களின் வேலை மற்றும் வருமானம் உயரும். இன்று குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாலையில் சுப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஒரு சிறப்பு ஒப்பந்தம் கிடைக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இவைகளில் ஆதாயம் உண்டாகும்.
உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும் உத்தியோகத்திற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
மிதுனம்

வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இவைகளில் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்திற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
கடகம்

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
மாணவர்களுக்கு உகந்தநாள் உங்கள் கல்வித் திறன் பளிச்சிடும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு சந்தோஷமான நிகழ்வுகள் உண்டு.
சிம்மம்

பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் இவைகள் உங்கள் கை வந்து சேர வாய்ப்புகள் உண்டு.
புதிய தொழில் முயற்சிகள் சற்று காலதாமதமாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும்.
கன்னி

நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.
சமயப் பணிகளுக்காக பணம் செலவழிக்கப்படுவதோடு, பணிகளிலும் ஈடுபடுவீர்கள். வேலை வியாபாரத்தில் அலட்சியம் மதியம் வரை மந்தமாக இருக்கும், அதன் பிறகு இரவு வரை எங்கிருந்தோ பொருளாதார பலன்கள் இருக்கும்.
துலாம்

நினைத்த காரியம் வெற்றி பெறுவார்கள். கடினமான உழைத்தால் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எங்கிருந்தோ பணம் வரவேண்டி இருந்தால் அது சாதகமாக அமையும்.
பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்தும், குடும்பத்தில் இளையவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும்.
புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும்.
தனுசு

விசா தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்குவரும் நல்ல நாள் ஆகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இனிய தகவல்கள் வந்து சேரும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மகரம்

பொருளாதாரத்தில் சிறிய அளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்

பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாக தெரியும். ஒரு சில பேருக்கு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பயனும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் காலம் இது.
தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் ஆதாயம் கிடைக்கும் சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றியடைவார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கும்.
மீனம்

வெளிநாடு வெளியூர் போன்றவற்றில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும்.
Discussion about this post