இன்றைய ராசிபலன் அக்டோபர் 07, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 20 சனிக்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள கேட்டை சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சனிக்கிழமையான இன்று அனுமன் வழிபாடு செய்ய வழக்கு, விசாரணைகளில் சாதக பலனைப் பெறுவீர்கள். குடும்ப விஷயங்கள், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை உண்டாகும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களூக்கு மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப சண்டைகள் தீருதல், பிரிந்த குடும்பம் ஒன்று சேருதல் என சாதக நாளாக இருக்கும். இன்று விநாயகருக்கு, ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றுவதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் தொல்லைகள் தீரும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் ராசியிலேயே சஞ்சாரம் செய்வது நன்மை தரும். எதிர்பாராத பணவரவு கிடைத்து மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடியதாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள், குடும்ப சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். சனிக்கிழமையான இன்று ஆஞ்சநேயர், சிவ பெருமான் வழிபாடு செய்யவும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் 12ல் இருப்பதால் நாள் முழுவதும் விரயங்கள் ஏற்படும். அதனால் எச்சரிக்கையுடன் உங்கள் செலவுகளை செய்யவும். இன்று நீங்கள் கடன் கொடுப்பதோ, கடன் வாங்குவதோ தவிர்க்க வேண்டிய நாள். மனக்குறை இல்லாத நாளாக இன்று அமைகிறது.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உடல், மன ஆரோக்கியம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள், குடும்பத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கமான சூழல் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் ஆரோக்கிய குறைபாடு, பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். புதிய வியாபார முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கு, விசாரணைகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
விநாயகர் வழிபாடு சிறப்பான் பலன் தரும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழப்பங்களுக்கு நண்பர்கள் காரணமாக இருப்பார்கள். அதனால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக கையாளவும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம நாளாக இருப்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. குடும்ப பிரச்னைகளுக்கு நண்பர்கள் மூலம் நல்ல த் ஈர்வு கிடைக்கும். அலுவலக விஷயங்களில் முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்.
கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பசுமாடுகளுக்கு உணவளிப்பது நல்லது.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் நன்மையைத் தரும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமண வரன் அமைதல் என சந்தோஷ செய்தி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. நாள் முழுவதும் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும். அலுவலகத்தில் இருந்த கடின சூழல் மாறும். மன அழுத்தம், மன பயம் நீங்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம், அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஏற்படும் குழப்பங்களுக்கு, கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து உண்ணுதல் போன்ற விஷயங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
சனிக்கிழமையான இன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை, துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யவும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவு கிடைக்கும். பல நாட்களாக இருந்த உடல் சோர்வு, மன சோர்வு, ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். குடும்பத்தில் நன்மைகளும், சுபகாரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. இன்று சுப செலவுகளும் காத்திருக்கிறது.
இன்று அன்னதானங்கள் செய்வதும், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் நல்லது.
Discussion about this post