இன்று சோபகிருது வருடம் ஆடி 22 (7 ஆகஸ்ட் 2023) திங்கட் கிழமை. சஷ்டி, சப்தமி திதி உள்ள இன்று உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய அற்புத நாளில், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

மேஷ ராசி அன்பர்கள் இன்று கடன் தொல்லைகள் தீரும். இன்றைய நாளில் நண்பர்களுக்கு நீங்கள் உதவி செய்தல், உங்களுக்கு அவர்களால் உதவி கிடைத்தல் போன்ற விஷயங்களால் மன நிம்மதி கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திங்கட் கிழமையான இன்று சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
இன்றைய நாள் உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உடல்நிலையில் பிரச்சனை ஏற்படலாம். குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி பலன்

இன்று நீண்ட தூர பயணம் ஒரு சிலருக்கு மிக சிறப்பான பலனையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தரும். வீட்டிற்கு வருகை தரும் சொந்தங்களால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். இன்று அன்னதானம் மேற்கொள்வது நல்லது.
ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், இன்று நீங்கள் அந்த வேலையை விரைவாகச் செய்ய முடியும், மேலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம்.
மிதுன ராசி பலன்

மிதுன ராசி அன்பர்கள் இன்று மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும். இன்றைய நாளில் பங்கு சந்தையில் முதலீடு செய்வது லாபத்தை தரும். சிறு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமானதாக அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்ற விஷயங்களின் இன்று ஈடுபடலாம்.
பெற்றோர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆசி பெறுவீர்கள். பயணத்தில் கவனமாக இருக்கவும். இன்று பிள்ளைகளின் ஆடம்பரத்தால் சற்று கவலை அடைவீர்கள்.
கடக ராசி பலன்

கடக ராசி அன்பர்கள் இன்று வெற்றி செய்திகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். சொத்து விவகாரங்களில் இருது வந்த இழுபறி வழக்குகள் முடிவுக்கு வரலாம். இன்று இனிப்புகள் வழங்கி குடும்பத்தில் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கலாம்.
திருமணத்தில் சார்ந்த இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண விஷயம் உறுதியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புத்திசாலித்தனத்துடனும் விவேகத்துடனும் முடிவெடுக்கவும்.
சிம்ம ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்கள் இன்று நீண்ட தூர பயணம் சிலருக்கு ஏற்படும். பூரம், உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்த்வர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் வாகனத்திற்கு பழுதுபார்த்தல் போன்ற விஷயங்கள் செலவை அதிகரிக்கும்.
இன்று அரசியலுடன் தொடர்புடையவர்கள் எதிர்பாராத வெற்றியைப் பெறலாம். உங்கள் மனதில் சில சுமைகளும் குறையும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பிள்ளையின் தொழில் சம்பந்தமான சில நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்கள் இன்று நீங்கள் புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களின் நட்பு கிடைப்பது போன்ற விஷயங்களால் உங்களின் வாழ்க்கையில் சற்று திருப்புமுனை ஏற்படுவதாக இருக்கும்.
கன்னி ராசியினர் இன்றைய நாள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் வாய்ப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
உங்கள் முயற்சிகளுக்கு வெற்றியைத் தரும் நாளாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்கள் இன்று விநாயகர் வழிபாடு செய்வது நல்லது. காதல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
இன்று கல்வித் துறையில் சில அசாதாரண சாதனைகளையும், மாணவர்களுக்கு போட்டியில் வெற்றியும் பெறுவீர்கள். நீங்கள் வியாபாரம் தொடர்பான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் சில புதிய வருமானங்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்கள் இன்று நீண்ட நாட்களாக இருந்த கனவுகள் நிறைவேறும். வண்டி வாங்குதல், விற்பது, குடும்பம் சார்ந்த நல்ல முடிகள் எடுப்பது போன்ற விஷயங்கள் ஆனந்தத்தைத் தரும். இன்றைய நாள் நீங்கள் குலதெய்வத்தை வணங்கலாம்.
உங்கள் புகழ் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மோதல் சூழ்நிலை ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது. உங்கள் பேச்சின் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் நண்பர்களுடன் உல்லாசமாக செலவிடுவீர்கள்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்கள் இன்று நாள் முழுவதும் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஜெயம் உண்டு. 8ல் இருக்கும் சூரியன் அமைந்திருப்பதால் இன்று சிவாலய வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
வீட்டு உபயோகப் பொருட்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் தங்கள் கூட்டாளிகளில் ஒருவரால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்கள் இன்று நாள் முழுவதும் சற்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். வேலை குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பான சூழ்நிலைகள் உருவாகலாம். பகல் நேரத்திற்கு பிறகு முடிவெடுப்பது நல்லது.
உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். இன்று குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைக் காண்பீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்கள் இன்று குடும்பத்திலும், குழந்தைகளின் ஆரோக்கியமும் முன்னேற்றம் அடையும். மருத்துவ செலவுகள் குறையும். இன்றைய நாளில் நீங்கள் அன்னதானம் மேற்கொள்வது நல்லது.
இன்று உங்கள் உறவினர்களிடமிருந்து சில பாதகமான செய்திகளைக் கேட்பீர்கள். நீங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஆலோசகரின் அறிவுரை கேட்கவும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்கள் இன்று நாள் முழுவதும் உற்சாகமான நாளாக இருக்கும். சகோதர, சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறி ஒற்றுமை நிலைக்கும். இன்று உங்கள் குழந்தைகளால் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிவாலயத்திற்கு சென்று அபிஷேகம் செய்வதும், அரிசி தானம் செய்வதும் கிரக தோஷத்தை போக்கும்.
உங்களுக்கு தொல்லை தரும் நாளாக இருக்கும். உறவில் விரிசல் ஏற்படலாம். குடும்ப தகராறு முடிவுக்கு வரும்.
Discussion about this post