மேஷம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகை அல்லது நீங்கள் குடும்பத்துடன் பயணம் செல்வது போன்றவைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்.
ரிஷபம்

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். படிப்பதற்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் சிரமப்படலாம்.
பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் தரக்கூடிய நாளாக அமையும். போது சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவது அல்லது இருக்கும் வாகனங்களுக்கு சுப செலவினங்கள் செய்வது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மிதுனம்

வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் இடம் மாறுதல் தொடர்பான விஷயங்களை என்ற ஆரம்பிக்கலாம். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும் என்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் உயர்கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது நல்லது. உடல்நலம் வயதானவர்களுக்குச் சற்று தொல்லை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வழி உண்டு என்றாலும் இறுதியில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
கடகம்

உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வரும்.
உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும் திறம்பட சமாளித்து நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். எதிர்பார்த்த கடன்கள் கிடைப்பது சற்று காலதாமதம் ஆகும்.
சிம்மம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிதி உதவி கிடைக்கும். வங்கிகளில் கடன் கேட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். ஆகவே தொழில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பை நிர்வாகம் சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.
கன்னி

இந்த நாள் இனிமையாக நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.
துலாம்

தொழில் வாய்ப்புகள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீடுகளைப் எதிர்பார தனவரவு போன்றவை உண்டாகும் நாளாகும்.
குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வழியாக கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி அடைவார்கள். உங்கள் கடின முயற்சியை நிர்வாகம் இக்கரைக்கும் உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் தொடங்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும்.
தனுசு

சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும். கல்வியை முடித்து வேலை வாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வர தாமதமாகும்.
இருப்பினும் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அதி விரைவில் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அவை தொடர்பான காரியங்களை தற்போது துவக்கலாம்.
மகரம்

அன்பர்களுக்கு கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிரச்சனைகள் இருப்பின் நிம்மதி அளிப்பதாக இருக்கும். அந்நியோன்னியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் என்றாலும் கூடுதல் முயற்சி தேவைப்படும்.
வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு செலவினங்கள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு. அவர்கள் செய்து வந்த பகுதி நேர தொழில் மாறுதல் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் இவற்றில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.
கும்பம்

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் துவக்குவதற்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் கணவன் மனைவி அன்னியோன்னியம் நன்றாக இருக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை மனதில் மேலோங்கி நிற்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் ஒரு தீர்வுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு வழக்குகளில் வெற்றி அடைவீர்கள்.
மீனம்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சொந்தத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீண்டகாலமாக உத்தியோகத்தில் இருந்து வந்தவர்கள் புது தொழில்களைப் பற்றி சிந்திப்பார்கள்.
கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் தென்படும். எதிர்பார்த்த சிபாரிசுகள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள்.
Discussion about this post