மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் தொழில் மற்றும் வேலையில் கடுமையாக உழைத்த பின்னரே வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படும்.
இன்று வீட்டு வேலைகளை முடிக்க சிரமம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். சோம்பேறித்தனம் உங்களை ஆதிக்கம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நேற்றை விட இன்று சிறப்பானதாக இருக்கும், உங்கள் வேலையில் அவசரப்பட்டு எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இது உங்கள் வேலை கூடுதலாக பாதிக்கக்கூடும்.
இன்று மாலையில் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்கள் மனைவியுடன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிப்பதில் சிறிது நேரம் செலவிடுவீர்கள்.
மிதுனம்

இன்று மிதுனம் ராசிக்காரர்கள் வேலை வியாபாரத்தில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதால் அதில் ஏமாற்றம் ஏற்படும். இன்று உங்கள் நிதி நிலை குறையக்கூடும். எனவே உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
இன்று உங்கள் குடும்பத்தில் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சு, நடத்தையில் நீங்கள் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
கடகம்

இன்று, உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரிகளின் நடத்தையால் வருத்தமடைவார்கள். இதனால் சற்று மன வருத்தம் ஏற்படும். கூட்டாக வியாபார, தொழிலில் செய்பவர்களுக்கு சாதக நிலை இருக்கும்.
உங்களுக்கு நிதி விஷயங்களில் சற்று நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. விரக்தியடைந்து எந்த தவறான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். பிறரின் தூண்டுதலால் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.
சிம்மம்

இன்று சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் நீங்கள் எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரம், தொழில் தொடர்பாக உங்கள் பணத்தை நிறைய செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. எந்த விஷயத்திலும் நீங்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும். உங்கள் லாபம் குறையும். இன்று உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக அலைச்சல் அதிகமாக இருக்கும். இன்று உங்கள் குடும்பத்திற்கு லாபம் கிடைக்கும்.
கன்னி
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.
நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலான வேலைப்பளு உண்டாகும். இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் அல்லது இடமாற்றத்திற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
துலாம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும் பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற முன்னேற்றத்தை அடைவார்கள் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் சற்று கூடுதல் கவனம் தேவை. சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை ஆக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.
தனுசு

குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.
மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும். பெண்களுக்கு நல்லதொரு நாளாகும் காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக உள்ளது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.
மகரம்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
தாய் வழி சொந்தம் வந்தது சற்று வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று பொறுமை மற்றும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்

பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம்.
கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது.
மீனம்

உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் சமுதாயத்தில் கூடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும்.
Discussion about this post