தேய்பிறை பிரதமை திதி காலை 7:54 மணி வரை,
அதன்பின் துவிதியை திதி, மூலம் நட்சத்திரம் நள்ளிரவு 3:27
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : முகூர்த்த நாள்
மேஷம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். உயர்கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு செலவினங்கள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு.
ஒரு சிலருக்கு பிரயாணங்கள் உண்டாகலாம் வெளிநாடு செல்லும். வாய்ப்புகள் கிடைக்கும் இவைகளால் வெற்றி உண்டாகும். வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். பெண்களுக்கு இனிமையான நாளாகும்.
ரிஷபம்

திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளியூர் வேலை வாய்ப்பு போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது
சிலர் வீடு கட்டுவது வீட்டை மராமத்து செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு திட்டம் இடுவதற்கான நல்ல நாள் ஆகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்பட அவற்றை எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள்.
மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகளை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் இடத்தில் ஏற்படுவதற்கான நாள் ஆகும். அது தொடர்பான காரியங்களை இன்று துவக்கலாம்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். பல புதிய வாய்ப்புகள் உங்கள் முன் வந்து நிற்கும். அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடனும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பிரயாணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் நல்லபடியாக அமையும். பிரயாணத்தில் வெற்றி உண்டாகும். என்பதால் வெளிநாடு செல்வது தனவரவு அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து பண வரவை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.
சிம்மம்

கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து வரும் நீங்கள் எடுக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
வழக்கு மற்றும் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். நீங்கள் எடுக்கும். எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கன்னி

பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தீர்வு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்வீர்கள். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய உகந்தநாளாகும் சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான தொல்லைகள் ஏற்படும் என்பதால் உணவுப் பொருட்களில் சற்று கவனம் தேவை.
துலாம்

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
ஒரு சிலருக்கு மொபைல் போன் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்

பொருளாதாரத்தில் ஓரளவுக்கு பற்றாக்குறை இருந்தாலும் எளிதில் சரி செய்து விடுவீர்கள். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தொழில் கல்வி மருத்துவ கல்வி போன்றவற்றில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளை ஈடுபடுவீர்கள். இவைகளில் வெற்றி உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மையடைவார்கள். சொந்த தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த தன வரவு உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக கடன் கிடைக்கும்.
மகரம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வித் திறன் நன்றாக வெளிப்படும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. நீங்கள் எடுக்கும்.
எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.
கும்பம்

விசா தொடர்பான காரியங்களில் வெற்றி உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையை நோக்கி பல நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகளை இன்று வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.
கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் இறுதியில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
மீனம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் அணிவகுக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ள இளையவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும் ஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வழி வகை உண்டு.
Discussion about this post