இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 17 புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சஞ்சரிக்கிறார். கன்னி, துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி சந்திராஷ்டமம் உள்ளது. .
மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் காத்திருக்கிறது. அலுவலகம் சார்ந்த விஷயங்களில் இருந்த அலைச்சல்கள், குழப்பங்கள் தீரும். சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியும், தெளிவும் தரக்கூடிய இன்றைய நாளில் குலதெய்வத்தை வழிபாடு செய்து, அன்னதானமும் செய்யலாம்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் உள்ள கிருத்திகா நட்சத்திரத்தில் சந்திரனின் சஞ்சாரம் நிகழ்வதால், உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். பெரியவர்களுக்கான உடல் நலக் குறைகள் தீரும். இதனால் மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதி கிடைக்கும். பங்கு சந்தை ஏன் முதலீடு உங்களுக்கு நன்மையை தரலாம். புது வரவுகள் மூலம் கிடைக்கக்கூடிய சில விஷயங்கள் சந்தோஷத்தை இரட்டிப்பாகும். குடும்பத்தில் குழந்தை பிறப்பு, திருமண வரன் அமைதல் போன்ற விஷயங்கள் மன மகிழ்ச்சியை தரும். இன்று குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தனலாகங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத புதிய நட்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.இதன் மூலம் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள், புதிய ஆலோசனைகள் கிடைத்து மன அமைதியும், ஏமாற்றங்கள் இல்லாத நாளாகவும் அமையும். இன்று முருகப்பெருமான் அபிஷேகமும், விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன் உச்சம் பெற்றிருப்பது உங்களுக்கு பலவிதத்தில் நன்மையை தரும். வழக்கு, விசாரணைகளில் வெற்றிகள் உண்டு. சஷ்டி திதியான இன்று முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யலாம். குழந்தைகள் இல்லாத தம்பதியினர் இன்று சஷ்டியை விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். சிறு சிறு குடும்ப சண்டைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். மன அமைதி, ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாளாக இருக்கும். கடன் தொல்லைகள், பண விவகாரங்கள், கொடுக்கல் வாங்கலில் நல்ல மன அமைதி கிடைக்கும்.நீண்ட தூர பிரயாணங்கள் நாங்கள் நன்மையை தரும். முருகப்பெருமான் வழிபாடு மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் போன்றவற்றில் தெளிவு ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். சிலருக்கு பல்வலி, கண் வலி தொடர்பான நீண்ட நாள் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு அது தீரக்கூடிய நாளாக இருக்கும். பெருமாள் ஆலயத்தில் துளசி மாலை சாற்றி வழிபாடு செய்ய எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. குறிப்பாக சித்திரை, சுவாதி நட்சத்திரம் காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த காரியத்தில் கவனம் தேவை. புதிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் செய்தல் கட்டுப்பாடு தேவை. பசு மாடுகளுக்கு உணவளிக்கவும். இனிய காரியங்கள் நிறைவேற கூடிய நாளாக அமையும். இன்று அரிசி தானம் செய்வது நன்மை தரும்.
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் ஏழாம் இடமான சப்தம ஸ்தானத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். அமோகமான பலன்கள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். இன்று விநாயகர் ஆலயத்தில் வழிபாடும், அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். புதிய வேலைக்கான விண்ணப்பம் செய்வதில் உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் மேம்படும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு மேன்மையை தருவார். மனதில் இருக்கும் அழுத்தங்கள், மன பய உணர்வுகள் நீங்கும். மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான நாளாக அமையும். அலுவலகம் சார்ந்த விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் எதிரிகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும், எனவே நீங்கள் ஒரு பயணம் செல்ல நினைத்தால், கவனமாக சிந்தியுங்கள், உங்கள் வாகனம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கக்கூடும்
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பழைய சச்சரவுகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.. உங்கள் செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள். அலுவலகத்தில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் சில ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம், இது உங்கள் புகழ் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு உயர்கல்வியில் வரும் தடைகளை சமாளிக்க தந்தையின் ஆலோசனை தேவைப்படும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகள் தரப்பிலிருந்து சில மகிழ்ச்சியான செய்திகளை கேட்பீர்கள்.நீண்ட நாட்களாக காத்திருந்த விஷயம் நடந்து மனதில் மகிழ்ச்சியைத் தரும். தாயின் உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். இன்று திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் வரும். இன்று சில வேலைகளில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் அதன் முழு பலனையும் பெறலாம். உங்கள் மனைவியிடமிருந்து முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் மனைவியுடன் சில எதிர்கால திட்டங்களைப் பற்றி விவாதிக்கலாம்.
Discussion about this post