மேஷம்

நண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும். இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.
காதல் தொடர்பான விஷயங்களை பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்

அன்பர்களுக்கு சந்திராஷ்டமம் இன்று காலை முதல் ஆரம்பிப்பதால் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது மற்றும் உத்தியோக உயர்வு உத்தியோக மாற்றம் போன்றவற்றில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
கணவன்-மனைவியரிடையே பிற்பகலுக்குப் பின் ஒற்றுமை நன்றாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் கூட்டுத் தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் சற்றே பிரச்சனையான நாள் ஆகும். எனவே முடிவு எடுப்பது என்பதை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூடுமானவரை அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும்.
மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவதாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொடுக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும்.
கடகம்

புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்கள் தொழிலுக்கு உதவிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. குறிப்பாக பெண்களுக்கு இனிய நாள் ஆகும். எதிர்பார்த்த பணம் வரும். போட்டி பந்தயம் லாபம் தரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு உகந்த நாளாக இன்றைய நாள் உள்ளது.
பொறுமையைக் கைக் கொள்வது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. விவசாயத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும்.
சிம்மம்

மூத்தவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் உணவு சார்ந்த விஷயங்களில் இவர்கள் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு கூடுமானவரை தவிர்க்கலாம்.
குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தகம் கணக்குத் துறை மருத்துவத்துறை போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை தொழில் சற்று கூடுதலாக இருந்தாலும் திறனுடன் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
கன்னி

புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்கள் தொழிலுக்கு உதவிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. குறிப்பாக பெண்களுக்கு இனிய நாள் ஆகும்.
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உள்ளவர்களுக்கு தீர்வு ஏற்படும்.
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி அடைவீர்கள். பரஸ்பர அன்பு குடும்பத்தில் நிலைத்திருக்கும். உணர்ச்சிவசப்படுவது மற்றும் தாராள மனப்பான்மை போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது அவசியம்.
துலாம்

புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும்.
மருத்துவத் துறை ஆராய்ச்சி துறை தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல விருத்தியையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவார்.
விருச்சிகம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைக்கும் நல்ல நாளாக இன்றைய நாள் அமையும்.
பங்குவர்த்தகத்தில் வங்கித் துறை சேவைத் துறை தங்கம் மற்றும் இரும்பு காப்பர் போன்றவற்றின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.
தனுசு

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு அலைச்சல்கள் கூடுதலாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள் கல்வியை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைப்பதற்கான நாள் ஆகும்.
மகரம்

உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.
உணவுப்பொருட்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும் மற்ற படி சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உங்கள் திருமணத்தை பற்றி பெரியவர்களுடன் கலந்து பேசுவதற்கு நல்ல நாள் ஆகும்.
கும்பம் 
வேலையில் முன்னேற்றம் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள் இன்றைய நாள். உடல் நலன் நன்றாக இருந்து வரும். சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்.
மீனம்

குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் மன நிம்மதி நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சமமாக இருந்து வரும் உடல் ஆரோக்கியத்தில் சிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஒருசிலருக்கு நிறைய அலைச்சல் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும். இவைகளால் வெற்றி அடைவீர்கள்.
Discussion about this post