இன்றைய ராசிபலன் அக்டோபர் 01, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 14 ஞாயிற்றுக் கிழமை, சந்திரன் மேஷ ராசியில் உள்ள அஸ்வினி, பரணி சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள பூரம், உத்திரம் சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் உங்கள் ராசியிலே சஞ்சாரம் செய்வது மனதிற்கு திருப்தியான நாளாக இருக்கும்.குழந்தைகள் விஷயத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். படிப்பு மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.குடும்பத்தில் இன்று சகோதர நிலை ஏற்படும். மனமகிழ்ச்சியான நாளாக இருக்கும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வணங்கவும்.
ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று 12 இடத்தில் இருக்கக்கூடிய குரு, ராகு, சந்திரன் ஆகிய ரிங் கூட்டணி காரணமாக தூக்கமின்மை ஏற்படும். இன்று நீங்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.
ரோகிணி, மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.
மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்களுக்கு பல விஷயங்களில் சாதகமான பலன்கள். தொழில் வியாபாரத்தில் நீங்கள் விரும்பிய லாபத்தை அடைய முடியும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளும், குடும்பத்தில் நிலம் சார்ந்த பிரச்சனைகளும் பேச்சுவார்த்தைகளால் தீரும். கணவன் மனைவி உறவு, சகோதர சகோதரிகளே உறவுகள் மேம்படும். இன்று நல்ல லாபகரமான நாளாக அமையும்.
கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய சந்திர பகவானால் வியாபாரிகளுக்கு தங்கள் வேலையில் ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும்.பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்றாலும், உங்களுக்கான லாபம் குறைவாகவே கிடைக்கும். இன்று உங்களுக்கு மனக்குறைகள் தீர விநாயகர் வழிபாடு செய்வது அவசியம். எடுத்து காரியத்தில் வெற்றி கிடைக்க ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்யவும்.
சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் மன நிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் சிலருக்கு ஏற்படும். இன்று மனக்குறை தீர விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நன்மை தரும்
கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அற்புதமான நாளாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் செய்ய வேண்டியது இருக்கும். இன்று கணவன் மனைவி இடையிலான உறவு சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மன ஆறுதல் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வந்த மனக் கசப்புக்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். காலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது..
விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திர பகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படலாம். சந்திர பகவானுடன் சேர்ந்த ராகுவின் சஞ்சாரம் உங்களுக்கு வீண் செலவுகளை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இன்று விநாயகர் வழிபாடு செய்ய எடுத்துக் காரியங்களில் வெற்றியும், மனக்குறை தீரும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரனின் சஞ்சாரம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவுடன் சேர்ந்து இருப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பணம் சார்ந்த விஷயங்களில் மனக்கசப்புகளோ,தகராறுகளை ஏற்படலாம்.பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.இன்றைய நாளில் விநாயகர் வழிபாடு செய்யவும்.
மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதளவில் இருக்கக்கூடிய குழப்பங்கள் தீரும். நீண்ட தூர பிரயாணங்கள் வெற்றியை தரும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவான், ராகு உடன் சேர்ந்து இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து செல்லும். கனவு விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய வியாபாரம் தொடக்கத்தை இன்று செய்யாமல் தவிர்ப்பது நல்லது. விநாயகருக்கு அபிஷேகம் செய்து, தேங்காய் மாலை சாற்றுவது மூலம் நீங்கள் நினைத்த விஷயங்கள் சிறப்பாக நடக்கும்.
மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன அமைதியும், மன நிறைவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நண்பர்களால் மன ஆறுதலும், மகிழ்ச்சியும் ஏற்படும். அடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பசு மாடுகளுக்கு உணவளிப்பதால் இன்று நன்மைகள் உண்டாகும்.
Discussion about this post