மேஷ ராசி பலன்

மேஷ ராசிக்கு இந்த மாதம் மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடிய நாளாக அமையும். செலவுகள் அதிகமாக இருக்கும். இன்று பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள், திருப்தியாக இருக்கும். பெண்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாகவும், பிறந்த வீட்டால் நன்மைகள் ஏற்படும்.
இன்று வியாபாரிகளுக்கு நல்ல ஒரு நாளாக அமைகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய எண்ணம் இருப்பவர்கள் அதற்கான நாளா தேர்வு செய்யலாம்.
வழிபாடு :
விநாயக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு நாள் முழுவதும் மனதுக்கு நிறைவான நாளாக இருக்கும். இன்று செலவுகள், வரவுக்கு மேல் அதிகமாக இருக்கும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி உண்டு. பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வழிபாடு :
இன்று சிவா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யவும்.
மிதுன ராசி பலன்

இன்று மிதுனத்தில் உள்ள திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது.
இன்றைய நாளில் மிதுன ராசியினர் பசு மாடுகளுக்கு உணவளிப்பதும், சிவ ஆலயங்களுக்கு பச்சரிசி தானம் அளிப்பதும் சந்திராஷ்டம தோஷத்திற்கு நிவர்த்தி தரும். நீங்கள் இன்றைய தினம் வரவு, செலவு கணக்கை சரிபார்க்கவும்.
வழிபாடு :
இன்றைய நாளில் மன நிம்மதி கிடைக்க சிவாலய வழிபாடு செய்வது நல்லது.
கடக ராசி பலன்

ஆடி தபசு உள்ள இன்றைய தினத்தில் கோமதி அம்மன் வழிபாடு செய்வதால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
வழிபாடு :
இன்று குலதெய்வ வழிபாடு செய்வதால் காரிய தடைகளும், கடன் தொல்லைகளும் நீங்கும்.

சிம்ம ராசிக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். க்டன் கொடுப்பது, கடன் வாங்குவது தொடர்பான விஷயங்களை இன்றைய நாளில் தவிர்க்கவும். இன்று பெளர்ணமி திதி, ஆடி தபசு உள்ள அற்புத நாளில் ராசி நாதன் சூரியன் 12ம் இடத்தில் இருப்பதால், இன்று சிம்ம ராசியினருக்கு சிறு சிறு மன குழப்பங்கள் உண்டாகலாம்.
வழிபாடு:
இன்று காலை வேளையில் அனுமன் வழிபாடு செய்யவும்.
கன்னி ராசி பலன்

கன்னி ராசி நேயர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை முயற்சிகளில் ஈடுபட்டால் உங்கள் எண்ணம் நிறைவேறும். இன்று இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
வழிபாடு :
இன்று காலையில் விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்து, ஆலயத்திற்கு அரிசி, வெல்லம் தானம் செய்வதால் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.
துலாம் ராசி பலன்

துலாம் ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய எண்ணம் உள்ளவர்களுக்கு அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.
புதிய வியாபாரத்திற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். தனலாபம் ஏற்படக்கூடிய நாளாக இன்று அமையும். காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு மனதிற்கு திருப்தியும், நிம்மதியும் உண்டாகும்.
வழிபாடு :
இன்று அன்னதானம் செய்வதும், சித்தர்கள் வழிபாடு செய்வதும் சிறந்த நாள்.
விருச்சிக ராசி பலன்

இன்று நாள் முழுவதும் மனதில் திருப்தியும், நிறைவும் ஏற்படும். பல நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். செவ்வாய்க் கிழமை பெளர்ணமி, ஆடி தபசு உள்ள இன்றைய அற்புத தினத்தில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய சிறப்பான நாளாக இருக்கும்.
வழிபாடு:
மறைமுக எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகள் நீங்க பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட, இன்றைய நாளின் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் நல்ல வெற்றியும், மனநிறைவும் தரக்கூடிய நாளாக இருக்கும். வங்கி பிரச்னைகள், அரசு சார்ந்த விஷயங்களில் இருக்கக்கூடிய குழப்பங்களுக்கு நல்லதொரு மாற்றங்கள் உண்டாவதைப் பார்க்கலாம். மனதிற்கு ஆறுதல் தரும் நாளாகவும், காதல் வாழ்க்கையில் பிரச்னைகள் தீரக்கூடியதாக இருக்கும். பல நாட்களாக வயதானவர்களுக்கு இருந்து வந்த உடல் நல பிரச்னைகள் தீரும்.
வழிபாடு:
இன்று முருகன் ஆலயத்திற்கு சென்று செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்ய சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மகர ராசி பலன்

இன்று மகர ராசியில் உள்ள திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் இன்று நீங்கள் சிவ பெருமான், மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்லது. ஆடி தபசான இன்று சங்கரநாராயணன், கோமதி அம்மன் வழிபாடு செய்வதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
வழிபாடு:
இன்று பச்சரிசி தானமும், அன்னதானமும் செய்து சிவாலய வழிபாடு செய்ய எதிலும் வெற்றி கிடைக்கும்.
கும்ப ராசி பலன்

இன்று நாள் முழுவதும் கும்ப ராசியினருக்கு இருக்கக்கூடிய மனக்குழப்பங்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்துவந்த குடும்ப சண்டைகள் தீரும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து சேருவது, நண்பர்கள் மூலம் நன்மைகள் நடப்பது திருப்தியை தரும். இன்று நீண்ட தூர பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது.
வழிபாடு
குலதெய்வ வழிபாடு, அன்ன தானம் செய்வதால் இன்றைய கிரக தோஷங்கள் நீங்கும்.
மீன ராசி பலன்

மீன ராசிக்கு இன்று நாள் முழுவதும் வெற்றியைத் தரக்கூடிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 2ல் ராகு, குருவின் சஞ்சாரமும், 8ல் கேது இருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்து செல்லும். 12ல் இருக்கும் சனியால் விரய செலவுகள் ஏற்படும்.
வழிபாடு:
பெளர்ணமி திதி, ஆடிதபசு உள்ள இன்றைய அற்புத நாளில் சிவனுக்கும், பார்வதிக்கும் அபிஷேகம் செய்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் உங்களின் மனக்குறை தீரும்.
Discussion about this post