மேஷம்
மேஷராசிக்காரர்கள் எதிர்காலம் குறித்த திட்டங்களை முன்னெடுப்பீர்கள். வீட்டிலும், பணியிடத்தில் உங்களின் பொறுப்பு அதிகமாகும். உத்தியோகத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்களை வீழ்த்த நினைப்பார்கள். இருப்பினும் உங்களின் செயல்பாட்டால் அவர்களை எளிதில் வெல்வீர்கள். தேவையில்லாமல் பொது இடங்களில் எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டாம். நீங்கள் கையில் எடுக்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியில் முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் நீங்கள் எந்த வேலையை கையில் எடுத்தாலும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய கூட்டாளி கிடைக்க வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து வாய்ப்பும், வசதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இனிமையான பயணத்தை மேற்கொள்வீர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்கு இன்று கலவையான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். சொத்து வாங்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தால் மிகவும் கவனமாக இருக்கவும்.
எந்த ஒரு பெரிய முடிவை எடுப்பதை இரு நாட்களுக்கு தவிர்ப்பதும், தள்ளிவைப்பதும் நல்லது. பணியிடத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையுடன் இருப்பீர்கள். அதிக அலைச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
கடகம்
கடகம் ராசிக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வாழ்வில் எந்த துறைகளில் இருந்தாலும் அதில் முன்னேற்றப்பாதையில் செல்ல வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை வலுவானதாக இருக்கும். வியாபாரத்தில் எந்த ஒரு சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினர் இன்று எந்த ஒரு முடிவையும் சிறப்பாக எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்த பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கு பல்வேறு வகையில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டவும். குழந்தைகளின் முலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். மன நிம்மதி பெற தியானம், யோகா செய்யவும்.
துலாம்
துலாம் ராசிக்கு அனைத்து வேலைகளும் எளிதாக நடந்து நல்ல வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். பணப்பரிவர்த்தனை செய்யும் போது ஒருவரை சாட்சிக்கு வைத்துக் கொள்ளவும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக மனம் விட்டு பேசுவீர்கள். உங்கள் வேலை, ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் எதிர்காலம் குறித்த கவலை அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த திட்டங்களுக்கு நேரத்தை ஒதுக்குவீர்கள், அதற்கான வேலைகளில் ஈடுபடுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். காதலுக்கு உகந்த நாளாக இருக்கும்.
தனுசு
உங்களுக்கு பல்வேறு வகையில் ஒரு வளமான பலனை அடைவீர்கள். தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மையும், மேன்மையும் உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டு. உங்களுக்கு இருந்த உறவு பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மகரம்
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும். தொழில் ரீதியாக லாபகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இதற்கு முன் இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி சாதக பலனைப் பெறலாம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கூட கிடைக்க வாய்ப்புள்ளது. தடைப்பட்ட சுப காரியங்கள் நடைபெறக்கூடிய சிறப்பான நாளாக இருக்கும்.
கும்பம்
பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் குறையும். குழப்பங்கள் விலகி மன நிம்மதி, பூரிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். உங்களின் பணிச்சுமை குறைந்து சுமுகமான பலன்கள் கிடைக்கும்.
மீனம்
எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலமாக ஒரு சில நன்மையை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சாதகமாகப் பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகும். நண்பர்கள் மூலமாக ஒரு சில நன்மை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல வாய்ப்பைப் பெறலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
Discussion about this post