Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

இன்றைய இராசிபலன்- 19.07.2022

July 19, 2022
in ஆன்மீகமும் ஜோதிடமும்
இன்றைய ராசிபலன்- 18.06.2022
0
SHARES
Share on FacebookShare on Twitter

மேஷம்

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மிதுனம்

பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் என்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கன்னி

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

துலாம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

எதிர்பாராத வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மகரம்

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வீடு வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். விருந்தினரின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்

கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும்.வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Tags: இராசிபலன்இன்றுமீனம்மேடம்
Previous Post

ஜனாதிபதியாக பதவியேற்க சஜித்துக்கே உரிமையுண்டு!- ஐ.ம.ச தெரிவிப்பு!!

Next Post

நாணய நிதியம் தொடர்பான ஆவணங்கள் மாயம்! – பிரதமர் அலுவலகம் தகவல்!

Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்புக் குழு இன்று இலங்கை வருகை!

நாணய நிதியம் தொடர்பான ஆவணங்கள் மாயம்! - பிரதமர் அலுவலகம் தகவல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.