நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக விசேட சோதனை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு(NTC) தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் இன்று முதல் (02) நடைமுறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பயணிகள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அதன் திட்டமிடல் பணிப்பாளர் கே.எஸ்.சி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட சோதனை
நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது
இதன்படி 30 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு 28 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post