பாடசாலைகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது என கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போசாக்கை அதிகரிக்கும் திட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நீட்சியாக மாணவர்களின் போசாக்கை அதிகரிக்கும் வகையில் இன்று முதல் உணவுத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
கல்வி அமைச்சு என்ற வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்துக்கு ஏற்ற மாணவர் சமூகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையுடன் கூடிய அறிவாற்றல் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post