இன்று (3) முதல் கல்வி கட்டமைப்பில் புதிதாக 1,875 அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பணி அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 60 அதிகாரிகள் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் மூன்றாம் தரத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர்.ஆங்கில ஆசிரியர் மேலும், தேசிய பாடசாலைகளில் உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கற்பிப்பதற்காக 109 ஆங்கில டிப்ளோமாதாரர்களும், உயர்தர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள், ஆங்கிலம் மற்றும் பாடங்களை கற்பிப்பதற்காக 1706 பட்டதாரிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் 13 வருட தொடர்ச்சியான கல்விக்கான நியமனங்கள் வழங்கப்படும்.
Discussion about this post