QR முறை அல்லது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் இன்று முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை, டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் இதன் பின்னர் செல்லுபடியாகாதென அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து முச்சக்கர வண்டிகளும், அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post