மோசமான காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள பாடசாலைகள் மற்றும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் இன்று (11ம் திகதி) முதல் திறக்கப்படும்.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் கடந்த 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கும் காலி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு (9) மற்றும் (10) ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
காலநிலை சீராகி வருவதாலும் மாத்தறை நில்வள கங்கை மற்றும் காலி கிங் கங்கை நீர்மட்டம் குறைந்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆற்று நீரில் இன்னும் மூழ்கியுள்ள மற்றும் ஆற்று நீரால் இடம்பெயர்ந்தோர் முகாம்களாக இயங்கி வரும் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்றையதினம் (11) தேவையான முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தென் மாகாண பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகள் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என தென் மாகாண கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Discussion about this post