இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சற்று முன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, திருமணத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையானது 150இலிருந்து 50ஆக மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்பை இன்று பிற்பகல் வெளியிடும்.
இதேவேளை நாடளாவிய முடக்கம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post